உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பயணி தவற விட்ட ரூ.1 லட்சம் ஒப்படைப்பு

ரயில் பயணி தவற விட்ட ரூ.1 லட்சம் ஒப்படைப்பு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், பயணி தவற விட்ட ஒரு லட்சம் ரூபாயை ரயில்வே போலீசார் பயணியிடம் ஒப்படைத்தனர். ராஜபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் தொழில் தொடர்பாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா செல்வதற்காக, நேற்று மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 'எஸ்.4' பெட்டியில் 26வது சீட் முன்பதிவு செய்திருந்தார். ரயில் வருவதற்கு முன், முதலாவது பிளாட் பாரத்தில் ஒரு இருக்கையில் ஒரு லட்சம் ரூபாயுடன் பையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ரயில் வந்ததும், பணப்பையை மறந்துவிட்டு, ரயிலில் ஏறி சென்று விட்டார். ரயில் கொடை ரோடு சென்றதும் பணத்தின் ஞாபகம் வந்தது. உடனடியாக ரயிலில் உள்ள பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். அவர், மதுரை ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., செல்வகுமாரிக்கு மொபைலில் தகவல் கொடுத்தார். அவரது தலைமையில் பெண் போலீசார் வாணி, முத்துமாரி, பூமாதேவி ஆகியோர் முதல் பிளாட்பாரத்தில் சோதனை செய்தனர். அங்கு இருக்கையில் இருந்த பணப்பையை கைப்பற்றினர். நாகராஜனை உடனடியாக திரும்ப வரவழைத்து, பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை