உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தியானம்!

விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தியானம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை நேற்று இரவு துவங்கினார். இதையொட்டி, குமரி முனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட மோடி, நேற்று மாலை 5:06 மணிக்கு கன்னியாகுமரி அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு வந்தார். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். 5:40க்கு அங்கிருந்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

வரவேற்றனர்

கோவிலை, 20 நிமிடங்கள் வலம் வந்து, தேவியை தரிசனம் செய்தார். பின், 6:05க்கு காரில் படகு தளத்துக்கு சென்றார். அவர் பயணித்த படகு, விவேகானந்தர் பாறைக்கு மாலை 6:15க்கு சென்றடைந்தது. விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் பிரதமரை வரவேற்றனர்.அங்குள்ள மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு, 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அறையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் தங்கவும், மற்றொன்று பிரதமருக்கு உணவு தயாரிக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளன.பிரதமர் வந்திறங்கியது முதல் பாறைக்கு செல்லும் வரை, கடற்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டன. இரண்டு கப்பல்கள் மற்றும் 10 அதிநவீன படகுகளில், கடலோர காவல் படையினர் தொடர்ந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் முகாமிட்டு, பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணியரை தடுக்க வேண்டாம் என, பிரதமர் அலுவலகம் கூறியிருந்தாலும், நேற்று காலை 11:00 மணிக்கு பின் படகுகள் இயக்கப்படவில்லை. கோவில் மற்றும் படகு தளத்துக்கு செல்லும் சாலைகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.பிரதமர் மோடியின் வருகை முழுக்க முழுக்க தனிநபர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதால், செய்தியாளர்கள் உட்பட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு, பல்வேறு ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

அனுமதிக்கவில்லை

எவரும் வர வேண்டாம் என்று டில்லியில் இருந்து கூறப்பட்டதால், அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வந்த போது அவரையும் அனுமதிக்கவில்லை.விவேகானந்தர் பாறை யை சுற்றி, நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடி படை, கப்பல் படை, தமிழக போலீசார் பணியில் உள்ளனர்.சர்வதேச அளவில் பெயர் பெற்ற பல்வேறு திறன்களை உடைய மார்க்கோஸ் என்ற கடல் செயல்வீரர் படையைச் சேர்ந்த 30 வீரர்கள், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.கடற்படையின் துணை ராணுவ அமைப்பான கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள், 164 வீரர்களுடன் கன்னியாகுமரியில் இருந்து, 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன.நான்கு டி.ஐ.ஜி.,க்கள், 10 எஸ்.பி.க்கள் உட்பட, 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பிரதமர் செல்லும் பாதைகளில், ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று முதல் ஜூன் 1ம் தேதி மதியம் வரை விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளும் பிரதமர், அன்று மாலை 3:00க்கு திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்கி விட்டு கரை திரும்புகிறார். பின், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

அரை மணி நேர தியானம்

விவேகானந்தர் பாறைக்கு வந்த மோடி, உள்ளே சென்று தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில், இரவு 7:00 முதல் 7:30 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அறைக்கு திரும்பிய அவர், இன்று காலை முதல் தொடர் தியானத்தில் ஈடுபட உள்ளார். இருப்பினும், பிரதமர் தியானம் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

டிரெண்டாகுது 'மோடி அகெய்ன்'

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை கண்டித்து நேற்று காலை 'கோபேக் மோடி' என, எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தன எதிர்க்கட்சிகள். இதையடுத்து, பா.ஜ.,வின் ஐ.டி., விங்கும் எக்ஸ் தளத்தில் பதிலடியாக, 'மோடி அகெய்ன்' என, ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறது. ஐ.டி., விங்க் நிர்வாகிகள் கூறுகையில், 'மோடியை வரவேற்று நேற்று மாலை 4:00 மணிக்கு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்ய திட்டமிட்டோம். ஆனால், தி.மு.க.,வினர் காலை 11:00 மணிக்கே, 'கோபேக் மோடி' என்று டிரெண்ட் செய்தனர். உடனே பா.ஜ.,வும் பதிலடி கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கி மீண்டும் மோடி என்கிற வகையில், 'மோடி அகெய்ன்' என்று டிரெண்ட் செய்தோம். துவங்கிய சில மணி நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் ஹேஷ்டேக்கை கடந்து ஒரு லட்சத்துக்கும் மேல் பார்வைகளை பெற்றது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

K.n. Dhasarathan
மே 31, 2024 21:03

அப்போ பிரதமர் மட்டும் தியானம் பண்ணனும், மற்றவர்கள் யாரும் கோயிலுக்கு வரக்கூடாது என்றால், அந்த தியானத்தால் என்ன பயன் ? ஒன்றும் இல்லை, அதற்கான இடம், நேரம் பார்த்தாலே தெரிகிறது, பொய்.ஜே.பி. மக்களை பற்றி கவலைப்படவில்லை, பயம் தெரிகிறது, பதற்றம் புரிகிறது, ஆனால் இது மிகவும் லேட், மக்கள் தீர்மானம் பண்ணி விட்டார்கள். சர்வாதிகாரிகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்று.


Senthil K
மே 31, 2024 21:52

4 தேதி.. பாரு... தயவுசெய்து... உன் முகவரியை தர முடியுமா??? யார்?? யாரை... ஓட ஓட விரட்டுறாங்கன்னு...


கத்தரிக்காய் வியாபாரி
மே 31, 2024 17:52

அமைதிக்கு பின் வரப்போகுது புயல். ஜூன் 4க்கு பிறகு தீமூக்கவுக்கு இருக்குது ஆப்பு.


தமிழ்வேள்
மே 31, 2024 13:02

திருட்டு திராவிஷ ,கான் கிராஸ் கம்மி கும்பல்களுக்கு ஆன்மிகம் என்றால் என்ன என்றே தெரியாது ...தண்டால் யோகம் ,மற்றும் மது தியானம்,மதமாற்ற தொழில் மட்டுமே அவர்கள் அறிந்தவை ...அவர்கள் அறிவு அவ்வளவுதான் ...அவர்களால் சனாதன தர்மத்தோடு ஒத்துப்போக இயலாது ....அப்படிப்பட்ட சனாதன , தேச விரோத அறிவிலிகளை தேர்ந்தெடுப்பது மக்கள் தவறு...


venugopal s
மே 31, 2024 11:39

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் மேடையிலே, மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே என்ற ஒரு பழைய எம் ஜி ஆர் படப் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது!


hari
மே 31, 2024 14:11

அப்படியே ஒரு நூறு ரூபாய் எக்ஸ்ட்ரா குடுத்தா பாட்டோட ஒரு குத்தாட்டமும் போடுவியா வேணுகோவாலு


Kasimani Baskaran
மே 31, 2024 14:21

வாழ்க்கைகே கற்பனை, கதை என்று திரிந்தால் ஒன்றும் மிஞ்சாது.


subramanian
மே 31, 2024 14:35

கூத்துக்கு மீசை வைக்கும் போது. எங்கள் விஸ்வ குரு தியானம் செய்ய, எதுவும் செய்யலாம் என்று உங்களுக்கு புரிந்து விட்டது.


rameshkumar natarajan
மே 31, 2024 10:45

Let him do Dhyanam , after the elections are over. When elewctions are to he held on 1st June and this being silent period he is doing electioneering in directly, which is not correct. One cannot expect these sort of decoram from this PM.


Kasimani Baskaran
மே 31, 2024 14:23

in directly - கொல்லாதீங்க...


hari
மே 31, 2024 15:17

you are trying to say something, but. do. you. understand. first what you say??? funny...


அப்புசாமி
மே 31, 2024 10:29

டில்லி வீட்டில் இளநீர் குடிச்சிட்டு முப்பது நாள் தியானம் பண்ணட்டுமே... இங்கே மக்களை அடிச்சி முடக்கி, வாழ்வாதாரத்தை கெடுத்து மூணு நாள் தியானம் எதுக்கு?


hari
மே 31, 2024 14:09

டாஸ்மாக் போகமேயே தெளிவா பேசுறியே கோவாலு....


naranam
மே 31, 2024 14:10

நீ இன்னும் இருக்கியாப்பு


subramanian
மே 31, 2024 14:41

அப்புசாமி, உனக்கு விவரம் பத்தலை. இனிமேல் வியாபாரம் ஜோராக நடக்கும்.


sankaranarayanan
மே 31, 2024 09:46

ஏன் எதிர்கட்சித்தலைவர்களும் வடக்கு நோக்கி பிரயாணம் செய்ய வேண்டியதுதானே யாரைய்யா வேண்டாம் என்கிறார்கள் பத்ரிநாத் செல்லலாம் கேதாரநாத் செல்லலாம் காசி செல்லலாம் அயோத்யா செல்லலாம் அவர்களை யாருமே தடுப்பாரில்லை இவர்களை கேட்டுக்கொண்டா பிரதமர் அவர்கள் இங்கே வரவேண்டும்


Balasubramanian
மே 31, 2024 09:24

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே! - என்று அவர் வெறும் இளநீர் குடித்து பழத்தை உண்டு தியானம் செய்கிறார் - அதை பொறுக்க முடியவில்லை என்றால் வேறு சேனல்கள் பாருங்கள்! - நல்லது கெட்டது நாலாம் தேதி தெரிந்து விடும்


VENKATASUBRAMANIAN
மே 31, 2024 08:21

இங்கே ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் கதறுகிறது. திமுக விசிக காங்கிரஸ் க்கு பேதி வந்துவிட்டது. வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள்


Kasimani Baskaran
மே 31, 2024 05:48

போலிக்கணக்குகளை மார்க் நீக்கப்போவதாக செய்தி வருகிறது - உபிஸ் கவலை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ