உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்தியில் மோடி ஆட்சி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

மத்தியில் மோடி ஆட்சி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

மயிலாடுதுறை: மத்தியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி வேண்டும் என மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பேசினார்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2d65mmx4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தருமபுரம் ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், திமுக ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 34 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றால் இது ஆன்மீக ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன ஆட்சி என்று சொல்ல முடியும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ள 64 தங்க ரதங்களும், 84 வெள்ளி ரதங்களும் முழுமையாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு வீதி உலா வருகிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட ஐந்து தங்க ரதங்களில் பெரியபாளையம் திருக்கோயிலில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கரதம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 வெள்ளி ரதங்களில் திருத்தணி முருகனுக்கு சொந்தமான வெள்ளி ரதம் முழுமையாக கட்டமைக்கப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மட்டுமல்லாமல் தேர்கள், திருக்கொட்டகைகள் உருவாக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. தருமபுரம் ஆதீனம் திமுக ஆட்சியில் தக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலை துறை ஒத்துழைப்பு நல்கும் என்றார்.

மத்தியில் மோடி ஆட்சி

பின்னர் மதுரை ஆதீனம் பேசுகையில், தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித் தரப்படுகிறது. மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம், பல்வேறு புலவர்களை உருவாக்கியுள்ளது. முனைவர்களாக உள்ளவர்களை படிக்க வைத்து ஆதீன புலவர்கள் ஆகவும் பண்பாளர்களாகவும் ஆக்கி உள்ளது தருமபுர ஆதீனம். அமைச்சருடன் நெருங்கி பேசியதற்கு என்னை திமுககாரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் நான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

DARMHAR/ D.M.Reddy
டிச 10, 2024 02:18

இந்த சமைய ஆtheena தலைவர்களெல்லாம் அரசியல் விஷயங்களில் வாய் மூடி சும்மாயிருப்பதே nalam.


Tetra
டிச 06, 2024 21:23

லகுடபதிகள்.


Harindra Prasad R
டிச 06, 2024 16:17

எதனை பாழடந்த கோவில்களை இந்த அரசு எடுத்து கட்டியுள்ளது?. தங்க ரதம் , வெள்ளிரதம் ஏன் ? verify செய்ய முடியாது வேஸ்டேஜ் கணக்கு காட்டிடலாம் . கும்பாபிஷேயகம் எதற்கு? எப்படி வேண்டுமானாலும் கணக்கு எழுதலாம் .. இதற்குத்தான் இத்தனை அக்கறை ... மேலும் இதில் எவ்வளவு அரசாங்க பணம் போட்டுள்ளார்கள்???? எல்லாம் பக்தர்கள் மற்றும் முன்னோர்களின் கோவில் சொத்து .


P Karthikeyan
டிச 06, 2024 08:45

இந்து மதம் அழிவதற்கு முழு முதற் காரணம் இப்படிப்பட்ட மடாதிபதிகள் ..மன்னன் தவறு செய்யும்போது அதை தட்டிகேட்க வேண்டும் ..இப்படி அடிபணிந்து போகக்கூடாது ..இவர்கள் எல்லாம் வெறும் மகுடபதிகள் தான்.


anantharaman
டிச 06, 2024 08:08

ஆதீனங்கள் திமுக ஆதரவாகப் பேசுவது பயம் காரணமாக. அறிவு முழங்கிய இவர்கள் இந்து மதத்தை வெறுக்கும் கட்சிக்கு ஏன் வால் பிடிக்கிறார்கள்?


sridhar
டிச 06, 2024 08:04

ஆதீனங்கள் விலை போனதற்கு இதுவே சாட்சி .


PARTHASARATHI J S
டிச 06, 2024 06:45

ஆதீனம் அரசியல் மக்களின் வெறுப்பை அதிகரிக்கும். அது சரி. கோவில்கள் மட்டும்தானா தமிழகம் ? எல்லாவிதத்திலும் மக்கள் நம்பிக்கை இழந்தது தமிழகம். தீயவர்கட்கு துணை போகுது. இதெல்லாம் மேதகு ஆதீனத்தின் கண்ணில் படாது. மோசமான ஆன்மீக வியாதி.


Mani . V
டிச 06, 2024 05:54

வந்தனமா வந்தனமா, எல்லோர்க்கும் வந்தனம், மணம் மணமா சந்தனம்……..…….. ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன், நான் எல்லாத்தையும் விக்கிறேன், இப்ப இங்கே நிக்கிறேன், என் கதைய முடிக்கிறேன்.


Ramesh Sargam
டிச 05, 2024 23:05

மடாதிபதிகள், அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. அரசியல்வாதிகளை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது சாலச்சிறந்தது.


Anantharaman Srinivasan
டிச 05, 2024 22:45

தருமபுரம் ஆதீனத்துக்கு இதே மேடையில் சனாதனத்தைபற்றி உதயாநிதி பேசினது தவறு என்று சொல்ல தைரியமில்லையே.. மடாதிபதிக்கு அரசியல் எதற்கு..? இவரை யார் திமுக ஆட்.சி பற்றி ஒபினியன் கேட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை