உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,500 ரேஷன் கடைகளில் மோடி செல்பி பாயின்ட்

1,500 ரேஷன் கடைகளில் மோடி செல்பி பாயின்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், 96 லட்சம் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா, 5 கிலோ அரிசியும், 18.65 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு தலா, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த அரிசியை மத்திய அரசு, இந்திய உணவு கழகம் வாயிலாக, தமிழகத்திற்கு இலவசமாகவழங்குகிறது.அதன்படி மாதம், முன்னுரிமை பிரிவுக்கு, 1.42 லட்சம் டன் அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு, 62,650 டன் அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 கிலோ அரிசி விலை சராசரியாக, 39.20 ரூபாயாக உள்ளது.அரிசி மட்டுமின்றி, இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க, மாதம் 8,500 டன் கோதுமையும்தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.இலவச அரிசி திட்டம், இம்மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.எனவே, இலவச அரிசி திட்டத்தைமக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில், நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளில்,பிரதமர் உருவபடத்துடன் கூடிய, 'செல்பி பாயின்ட்' ஏற்படுத்தப்பட்டுவருகிறது.எனவே, தமிழகத்திலும் 1,500 ரேஷன் கடைகளில் பிரதமரின் செல்பி பாயின்ட் அமைக்க, அந்த கடைகளை அடையாளம் கண்டு தகவல் அளிக்குமாறு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு, மத்திய உணவு துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜன 30, 2024 13:13

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை எல்லாம் இனிமேல் கிடைக்காது


வாய்மையே வெல்லும்
ஜன 30, 2024 09:48

ஸ்பெயின் நாட்டில் ஒருவருக்கு இன்று வாயும் புளிக்கும் மங்கா அதைவிட புளிக்கும்... வந்த செய்தி அப்படி..


Mani . V
ஜன 30, 2024 03:18

இங்க உள்ள கூட்டம் மக்களின் வரிப்பணத்தில் ஊழல் பேர்வழிக்கு சந்து, பொந்து எங்கும் சிலை வைத்து கொலையாய் கொல்வது போதாதென்று, இவர்கள் வேறு செல்பி, குல்பி என்று டார்ச்சர் செய்கிறார்கள்.


LAX
ஜன 30, 2024 00:47

1500 கடைகளையுமே (லிஸ்ட்) வேண்டாவெறுப்புடன் கொடுத்துவிட்டு, மற்ற கடைகளில் அவசர அவசரமாக.. 'குடும்பத்துல 4 பேர் கொண்ட குரூப் போட்டோவைக் கொண்ட வளைவுகளை ஏற்படுத்திவிடும் தீராவிஷ மாடல் அரசு..


Ramesh Sargam
ஜன 30, 2024 00:28

இதை கேள்விப்பட்டவுடன் அந்த உதவா நிதி ரொம்ப பொங்கி இருப்பானே...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை