உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி 3வது முறையாக பிரதமர் ஆவது உறுதி: அண்ணாமலை

மோடி 3வது முறையாக பிரதமர் ஆவது உறுதி: அண்ணாமலை

நாகர்கோயில்: ‛‛ நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆவது உறுதி'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. இந்த மண்ணில் தான்,1995ல் இருந்து தான் மோடி, ஒற்றுமை யாத்திரையை ஆரம்பித்தார். குமரி மண்ணின் மைந்தராக மோடி உள்ளார்.நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்காக உறுதியுடன் இங்கு வந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nf35qr6b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‛ இண்டியா ' கூட்டணியில் குடும்ப கட்சிகள், வாரிசுகளை பதவியில் அமர்த்தும் கட்சிகளே உள்ளன. மக்களே என் குடும்பம் 142 கோடி இந்தியர்களே எனது குடும்பம் என மோடியின் குடும்பமாக சகோதரர் ஆக சகோதரிகளாக உள்ளனர்.400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார். நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்து, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார்.1892 ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.தற்போது வந்துள்ள பிரதமர் மோடி ‛விஸ்வகுரு'வாக மாறி உள்ளார். 2047 ல் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும். குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து கட்சிகளும் தே.ஜ., கூட்டணியில் உள்ளன. 3வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இது உறுதி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

அதிக நிதி

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சிக்காக கொடுத்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின்பு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. மீனவர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தி, 38,500 கோடி ரூபாய், மீனவர் நலனுக்காக ஒதுக்கி உள்ளார். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குமரி, தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்களை ஒரே தொலைபேசி அழைப்பு வாயிலாக பிரதமர் மீட்டார். மீனவர் நலனில் உண்மையான அக்கறையுள்ள தலைவராக மோடி திகழ்கிறார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் வேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.,க்கள் வென்றனர். எண் மண் மக்கள் யாத்திரை மூலம் 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். 3வது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இவ்வாறு எல். முருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Indian
மார் 16, 2024 12:51

இந்த அண்ணாமலை சொல்றான் அந்த அண்ணாமலை முடிக்கிறான் லக லக லக லக .....


Sampath Kumar
மார் 16, 2024 09:17

நல்ல வரட்டும்


PRAKASH.P
மார் 16, 2024 00:23

Bonds are received from money looters worst.. bjp lost already.. no hope anymore with anyone in Indian politics


Ramesh Sargam
மார் 15, 2024 23:36

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டுமென்றால், போதைப்பொருட்கள் முற்றிலும் அழிக்கப்படவேண்டுமென்றால், நல்லாட்சி 'மலர' வேண்டுமென்றால், பெண்களின் கழுத்தில் தாலி நிலைக்க வேண்டுமென்றால், அண்ணாமலை தமிழக முதல்வராக வரவேண்டும். மோடிஜி அவர்கள் பிரதமராக தொடரவேண்டும். திருட்டு திமுகவை அடித்து துரத்துவோம்.


ஜில்ஜில்
மார் 15, 2024 23:32

தேர்தல் பத்திரம் சூப்பரா வித்திருக்காமே... வாங்குனவங்களுக்கு செம காண்டிராக்ட் குடுத்தாச்சாமே. 539 ம் நமதே.


venugopal s
மார் 15, 2024 23:15

அண்ணாமலை முதலில் ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு ஜெயித்துக் காட்டட்டும், பிறகு மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவது பற்றி பேசலாம்!


Barakat Ali
மார் 16, 2024 08:43

அண்ணாமலை வென்று காட்டுவதற்கும், மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கும் என்ன தொடர்பு ???? மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆக அவருடைய கூட்டணிக்குப் பெரும்பான்மை தேவை .... அதற்கு அண்ணாமலை தேர்தலில் நின்று வென்று காட்ட்டவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை ..... எழுத நினைப்பதை மூளைக்கு அனுப்பி இதில் லாஜிக் ஏதாவது இருக்கிறதா என்று ஆய்வு செய்யமாட்டீரோ ????


Easwar Kamal
மார் 15, 2024 21:25

unfit முருகா இன்னமும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சிறை பிடிப்பு மற்றும் படகுகல் இலங்கை அரசு பறிமுதல் செய்கின்றது. உருப்படியா ஏதாவது செஞ்சு இருந்த தமிழக முதல்வர் உனக்குதனய முதல கூப்பிடுவாரு. அதை விட்டுட்டு அவர் நேர ஜெய்ஷ்ங்கர் கூப்பிடறாரு. இதுல இருந்து தெரியல எந்த அளவுக்கு பிட்டுனு.


முருகன்
மார் 15, 2024 19:31

தமிழகத்தில் உங்கள் நிலை பரிதாபமாக உள்ளது


தாமரை மலர்கிறது
மார் 15, 2024 18:48

இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடி.


Oviya Vijay
மார் 15, 2024 15:43

வாய்ப்பு இல்லை மல.. வாய்ப்பே இல்லை...


suresh
மார் 15, 2024 17:18

வாய்ப்பு இல்லை என சொல்ல உமக்கு அருகதையும் இல்லை , அதிகாரமும் இல்லை . ஒன்றும் தெரியாத தத்தி எல்லாம் தமிழக அரசு பதவிகளில் ஒட்டி கொண்டு இருக்கும் சமயம் , நன்கு படித்த , அறிவாளியான , நேர்மையான , ஊழல் செய்யாத அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை என சொல்ல நீர் யாரோ ?


Bala
மார் 16, 2024 00:43

சுரேஷ் அவர்களே தமிழக தத்திகள் எல்லாம் ஒன்று கூடிவிட்டது. படித்தவனுக்கு எங்கே மரியாதை?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி