உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 மாதத்தில் கொலைகள் குறைந்தன: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை

3 மாதத்தில் கொலைகள் குறைந்தன: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை

சென்னை: 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மூன்று மாதத்தில் கொலைகள் குறைந்துள்ளன' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகள் குறித்து பகுப்பாய்வு செய்ததில், 2017 - 2020ம் ஆண்டுகளில் கொலைகள் அதிகம் நடந்துள்ளது தெரியவந்தது. அதிகபட்சமாக, 2019ல் மாநிலம் முழுதும், 1,745 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. 2021க்கு பின், ஒவ்வொரு ஆண்டும் கொலைகள் குறைந்து வருகின்றன, கடந்த, 12 ஆண்டுகளில், எந்த ஒரு ஆண்டையும் விட, 2024ல் குறைந்த அளவாக, 1,563 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, ஆறு ஆண்டுகளில், அவர்கள் தொடர்பான கொலைகளும் குறைந்து உள்ளன. கடந்தாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரை, 354 கொலைகள் நடந்துள்ளன. போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்த ஆண்டில் அதே மூன்று மாத காலத்தில், 340 கொலைகளாக குறைக்கப்பட்டுள்ளன.மற்ற ஆண்டுகளை காட்டிலும் அதிகபட்சமாக, 2024ல், 3,645 ரவுடிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஏ பிளஸ், ஏ, பி, சி வகை ரவுடிகளின் எண்ணிக்கையும், 50 சதவீதம் குறைந்துள்ளது. நீதிமன்றங்கள் வாயிலாக, 242 ரவுடிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 68 ரவுடிகளின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது, 12 ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச ஜாமின் ரத்தாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Gopal Kadni
ஏப் 25, 2025 17:35

இப்படி சந்தோஷமாக இருந்தால் பத்தாது. பூஜ்யம் ஆனப்பறம சொல்லுங்கள், நாங்களும் சந்தோஷமாக வர்றோம்.


venugopal s
ஏப் 25, 2025 17:20

காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து விட்டது என்று மத்திய பாஜக அரசு சொல்வது போல் உள்ளது!


c.mohanraj raj
ஏப் 25, 2025 13:59

ஏன் இன்னும் இவர் அதிகமாக எதிர்பார்த்தாரோ என்ன செய்வது இப்படியான அதிகாரிகள் இருப்பது நமது சாபக்கேடு


rajasekar
ஏப் 25, 2025 12:24

சூப்பர் காமெடி.


Barakat Ali
ஏப் 25, 2025 10:32

வாரிசை மாடல் ஆக்கியாச்சா ????


M Ramachandran
ஏப் 25, 2025 10:04

டூப்பெல்லாம் விட கூடாது.


Shankar Narayanan V S
ஏப் 25, 2025 09:56

இதை போன்ற ஒரு அறிவிப்பை தந்து இந்த டிஜிபி, தான் ஒரு லாயக்கற்றவர் என்று நிரூபிக்கிறார்


C.SRIRAM
ஏப் 25, 2025 09:48

சிரிப்பு போலீஸ்


Admission Incharge Sir
ஏப் 25, 2025 09:40

இப்படி ஒரு அறிக்கையை வெளியிடவே இவர் சங்கடப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது, இப்படி ஒரு அறிக்கையை விடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது.


Sundaran
ஏப் 25, 2025 08:28

அடுத்த தேர்தலில் எம் ல் எ சீட்டு உறுதி . இல்லையெனில் இரண்டு வருடங்களுக்கு பதவி நீட்டிப்பு கட்டாயம் உண்டு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை