உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்

முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழநி: பழநியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியை ஆக.,30 வரை இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பழநியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் மற்றும் நிறைவு நாளான இன்று காலை 8 மணிக்கு திருவேல் இறைவன் தீத்தமிழ் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கி நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bc0rondr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநாட்டினை முன்னிட்டு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் சிறப்புக் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை அனைவரும் பார்வையிடும் வகையில் வரும் ஆகஸ்ட் 30 வரை வரை திறந்திருக்கும் எனவும் அனுமதி இலவசம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

உதயநிதி உரை

இம்மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இது திடீரென நடத்தப்பட்ட மாநாடு அல்ல. தி.மு.க., ஆட்சியில் 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3 ஆண்டுகளில் 1,400 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 3,800 கோடி ரூபாயில் 8,500 கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறது. திராவிடம் யாரையும் ஒதுக்காது. திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது ஹிந்து சமய அறநிலையத்துறை இந்தியா முழுதுக்கும் வழிகாட்டுகிறது. இம்மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல் கலாசார மாநாடாகவும் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

karunamoorthi Karuna
ஆக 26, 2024 08:03

உச்ச நீதிமன்ற வழக்கில் இருந்து தப்பிக்க போடும் திட்டம் தான் இந்த மாநாடு முருகன் மாநாடு நடத்தப்பட்டது என்று சொல்லி தப்பிக்க கருணாநிதி வழியில் திட்டம்


மோகனசுந்தரம்
ஆக 25, 2024 20:31

அடப்பாவிகளா! இது அண்ட புழுகு, ஆகாசபுளுகு அல்லவா.


சமூக நல விரும்பி
ஆக 25, 2024 20:08

மக்கள் ஏமாற தயாராக இல்லை


ManiK
ஆக 25, 2024 19:09

அப்பாவுக்கு எழுதிகுடுப்பவர் தான் பையனுக்கும் எழுதி கெடுக்கிறார் போல..!? same பொய், பித்தலாட்டம்


ஆரூர் ரங்
ஆக 25, 2024 17:23

அறநிலையத்துறை ஆவணங்களிலுள்ள பல நூறு ஆலயங்கள் இருக்குமிடமே தெரியவில்லையாம். இவர்கள் ஆலய நிலங்களை மீட்டனர் என்பது பக்தர்களை ஏமாற்றும் செயல் .


ஆரூர் ரங்
ஆக 25, 2024 17:21

சனாதன கேசு எல்லாம் முடிஞ்ச பின்னால் பெறலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை