உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமையல் கலைஞர்கள், மாணவர்களுக்கு என் பத்மஸ்ரீ விருது சமர்ப்பணம்: தாமு

சமையல் கலைஞர்கள், மாணவர்களுக்கு என் பத்மஸ்ரீ விருது சமர்ப்பணம்: தாமு

சென்னை: பிரபல சமையல் கலைஞர் தாமு, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். டில்லியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், ஜனாதிபதி கையால் விருது பெற்று திரும்பிய தாமுவிற்கு, சென்னை விமான நிலையத்தில் நேற்று, தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின், தாமு அளித்த பேட்டி;சமையல் கலையில் பத்மஸ்ரீ விருது பெற்றதை, நான் பெருமையாக நினைக்கிறேன். தென்னிந்தியாவில் முதல் தமிழனாக இந்த விருதை பெறுவது, மகிழ்ச்சியாக உள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை நேரில் பார்த்தது, மிகப்பெரிய விஷயமாக இருந்தது.இந்த விருதை, வாழ்நாள் சாதனையாக பார்க்கிறேன். 'கேட்டரிங்' படிக்கும் மாணவர்கள், வளர்ந்து வரும் சமையல் கலைஞர்களுக்கு, இதை சமர்ப்பிக்கிறேன். முன்பெல்லாம், 'குக்' என்று தான் சொல்வர்; பின்னர், 'செப்' என்றனர்; இப்போது, பத்மஸ்ரீ என்று சொல்வது, பெருமையாக உள்ளது.வளர்ந்து வரும் சமையல் கலைஞர்கள் கடினமாக உழைத்தால், இதுபோன்ற விருதுகளை பெற முடியும். சமூகத்திற்கு தொண்டாற்றுவதும் அவசியம். கேட்டரிங் என்ற, சமையல் கலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், 'செப்' கமிட்டியினருக்கும், இந்த விருது உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை