மேலும் செய்திகள்
11 மாவட்டங்களில் இன்று கனமழை
44 minutes ago
கோவை மெட்ரோ திட்டம்; மத்திய அரசு விளக்கம்
1 hour(s) ago | 2
எஸ்.ஐ.ஆர்., முகாம்: வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
5 hour(s) ago
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேரடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி இளம் பயிர்கள் மழை வெள்ள நீரினால் வயல்களில் மூழ்கியுள்ளது. விவசாயிகளுக்கு ஆறுதலாக கடந்த சில நாட்களாக லேசான மழை விட்டு விட்டு பெய்தாலும், விளை நிலங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி, இளம்நெற்பயிர்கள் மூழ்கி கிடப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடைமடை பாசன விவசாய சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், கடலில் கலக்கும் ஒவ்வொரு வடிகால் ஆற்றிலும் தடையில்லாமல் தண்ணீர் வடியும் வகையில் முகத்துவாரங்களை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை நீர்வளத்துறையினர் கண்டு கொள்வதில்லை. நாகை- விழுப்புரம் நான்கு வழி சாலை பணியின் போது பல இடங்களில் வடிகால் வாய்க்கால்கள், கழிவு நீர் சாக்கடைகள் போல் மாறிவிட்டது. மூடப்பட்ட வடிகால் வாய்க்கால்களை கண்டறிந்து வெள்ள நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் பலனில்லை. இதனால் பாலையூர், தலைஞாயிறு, திருக்குவளை, கோகூர், சாட்டியக்குடி, வலிவலம், நரிமனம் போன்ற பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. என்றார்.
44 minutes ago
1 hour(s) ago | 2
5 hour(s) ago