உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் யாருடைய குரலாகவும் பேசவில்லை: நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் யாருடைய குரலாகவும் பேசவில்லை: நயினார் நாகேந்திரன்

நெல்லை: எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம் தான். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். நெல்லையில் அவர் அளித்த பேட்டி; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q44s3yl6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இபிஎஸ்சுக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதில் என் பார்வை என்பது எதுவும் கிடையாது. அதை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். செங்கோட்டையன் பேச்சு அதிமுக உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை. பாஜ என்பது யாருக்கும் உரிமையான கட்சி கிடையாது. பாஜ ஒரு தேசிய கட்சி. 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள், 1300க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ள கட்சி. இன்றைக்கு நான் 3 ஆண்டுகள் தலைவராக உள்ளேன். கட்சி மேலிடம் தொடர்ந்து அனுமதித்தால் தான் நான் இந்த பதவியில் தொடர முடியும். ஆனால் திமுக அப்படி இல்லை. அது ஒரு குடும்ப கட்சி. அதில் தான் வாரிசு இருக்கக்கூடாது. தேர்தல் என்பது வேறு. அரசியல் கூட்டணிக் கட்சிகள் இன்னும் 7 மாதம் உள்ளது.பல்வேறு நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும். காலங்கள் உள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.பாஜவில் எந்த கோஷ்டிபூசலும் இல்லை. எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் ஒரு தீர்மானம் பண்ணி விட்டார்கள் என்றால் அதில் மாறமாட்டார்கள். இன்றைக்கு ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. கூட்டணி விவகாரத்தில் ஓபிஎஸ் அறிக்கை விடும் முன்பே நான் அவரிடம் பேசி இருக்கிறேன். அதேபோல டிடிவி தினகரனிடமும் நான் பேசி இருக்கிறேன். எல்லாம் காலம் வரும்போது சரியாகிவிடும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
செப் 05, 2025 18:26

நயினார் நாகேந்திரன் முதலில் அவர் கட்சியில் உள்ள வெவ்வேறு குரூப்களை சமாளித்து ஒற்றுமையை கொண்டு வரட்டும்!


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 18:15

செங்கோட்டையன் டீம்காவில் ஐக்கியம் ஆவதற்கு முன் அவரை பாஜகவிலே சேர்க்க பாருங்க. லம்ப்பா கொடுத்து அமுக்கிடுங்க.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 18:13

பயனிச்சாமி கையெழுத்து இல்லாம ஆடீம்கா வேட்பாளர்களை நிக்க வெக்க முடியாது. ஒருவேளை ஏ1 மாதிரி பயனிச்சாமியை கோமாவிலெ வெச்சி கட்டை விரலை உருட்டலாம்் ஆனா அதுக்கெல்லாம் டைம் ஆகுமே? பேசாம என்டிஏ கூட்டணி அறிவிச்சு அதிலே ஆடீம்காவை சேர்க்காமல் காய் விடுவதை தவிர வேறு வழியில்லை.


கூத்தாடி வாக்கியம்
செப் 05, 2025 16:12

ஜெய லலிதா திமுக வை விட குறைவாக தான் ஊழல் செய்தார் அவருக்கே அந்த நிலைமை என்றால் இவர் கலுக்கு... காஜஆனவிர்க்கு வரவேண்டிய பணம் வந்தால் இந்தியஆவின் நம்பர் ஒன் மாநிலமா க தமிழ் நாடு இருக்கும்


Sridhar
செப் 05, 2025 14:36

பரவா இல்லேயே, அமித் ஷா வ கேக்காமலே கருத்து சொல்றாரே


Guna Gkrv
செப் 05, 2025 13:32

திரு. நயினார் தி மு க வை ஆட்சியிலிருந்து எடுத்துவிட்டு நீங்க என்ன கிழிக்கப்போகிறீர்கள் ,நீங்க வந்து நாட்டை இரண்டு ஆக்கவா? பேசாமல் நீங்கள் அ தி மு கா வில் இணைந்து விடலாம்.


pakalavan
செப் 05, 2025 13:19

கட்சிய விட்டு ஓட விடனும்


viki raman
செப் 05, 2025 12:23

நீங்க திரு செங்கோட்டையன் Admk வில் என்னைஜிருங்க வாழ்த்துக்கள்.


pakalavan
செப் 05, 2025 12:00

எடப்பாடிய கட்சில இருந்து தூக்கதான் இந்த மீட்டிங்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை