உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்; புதிய பொறுப்பை அறிவித்தார் விஜய்

தவெகவின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்; புதிய பொறுப்பை அறிவித்தார் விஜய்

சென்னை: தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரைச் செயலாளர் பொறுப்பை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர். அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர் நாஞ்சில் சம்பத் தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாஞ்சில் சம்பத் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவர், பொதுச் செயலாளர் ஆனந்துடன் இணைந்து தன்னுடைய பணிகளை மேற்கொள்வார். கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தமது அறிவிப்பில் விஜய் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ