உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இசையமைப்பில் தேசிய விருது: 7வது முறையாக பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பில் தேசிய விருது: 7வது முறையாக பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கப்படுகிறது. இது இவர் பெறும் 7வது தேசிய விருது.புதுடில்லியில் 2022-ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் -1, சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை என நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெறுகிறார்.இதற்கு முன்பு முதல் முறையாக அவர் அறிமுகமான 'ரோஜா' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். அதற்கடுத்து 'மின்சார கனவு, லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை' ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.2010ம் ஆண்டு முதல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் “சிறந்த பாடல்களுக்காக, சிறந்த பின்னணி இசைக்காக” என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.அதன்பின் ஏஆர் ரஹ்மான் 'மாம்' ஹிந்திப் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், தற்போது 'பொன்னியின் செல்வன் 1' படத்திற்காக மீண்டும் அதே விருதையும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mehar Nisha
ஆக 17, 2024 15:59

நெவெர் பேட்ட a.r.rahman


Mehar Nisha
ஆக 17, 2024 15:57

இ லைக் google


Radhakrishnan Seetharaman
ஆக 17, 2024 09:25

இதில் ஒரு அல்ப சந்தோஷம் ???


V RAMASWAMY
ஆக 17, 2024 09:06

இப்பொழுதாவது மமதை குறையுமா?


Siva Shankar
ஆக 17, 2024 08:29

யாருடைய இசை மனதில் நிற்கின்றதோ..அதுவே சிறந்த பாடல் அதற்கு இசை அமைத்தவர் யாரோ அவரே சிறந்த இசை அமைப்பாளர்


DHANASEKARAN DEVAN
ஆக 17, 2024 06:47

ஆறாவது முறை தேசிய விருது பெற்ற வருடமே அவர் முதலிடத்திற்கு வந்து விட்டாரே? இப்போ மீண்டும் அதை பதிவு செய்வதில் உங்கள் கீழ்த்தரமான உள்நோக்கம் வெளியே வந்து விட்டது


Azar Mufeen
ஆக 17, 2024 06:19

அப்படிபார்த்தால் மெல்லிசை மன்னரின் இசையை விட இசைஞாணியின் இசை பெரியதா, மூவரும் அவர்களின் தனித்துவத்தில் மன்னர்கள், மத்திய அரசுக்கு சொம்படித்ததால்தான் இவர் வருமானவரி சோதனையிலிருந்து விலக்கு, ராஜ்யசபா mp, பதவி


Kumar Kumzi
ஆக 17, 2024 10:30

பாசம் பேச வைக்குது ஹாஹாஹா


kantharvan
ஆக 17, 2024 06:11

ஜெலுசில் குடிக்கவும் ..


Krishna
ஆக 17, 2024 00:48

Sir will get for viduthalai movie


Kumar Kumzi
ஆக 16, 2024 23:26

இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதன் கூட இசைஞானி இளையராஜாவின் இசையை கேட்டுக்கொண்டே இறக்கணும்னு தான் ஆசை படுவான் நம்பர் வன்னின் பாடலை ஞாபகத்தில் கொண்டு வருவதற்குள் நாம் போய்விடுவோம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை