உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய வங்கி ஏடிஎம் உடைப்பு; 7 லட்சம் ரூபாய் கொள்ளை

தேசிய வங்கி ஏடிஎம் உடைப்பு; 7 லட்சம் ரூபாய் கொள்ளை

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,ஐ உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கியும் அதனை ஒட்டி ஏ.டி.எம்., மையமும் அமைந்துள்ளது. இதன் மூலம் மேலச்சாலை, அண்ணன் பெருமாள்கோவில், கீழச்சாலை, காத்திருப்பு, நாங்கூர் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர். மெயின் ரோட்டின் அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு காவலாளி கிடையாது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மூன்று பேர் முகமூடி அனிந்து வந்து, ஏ.டி.எம்., மிஷினை கடப்பாரை கொண்டு உடைத்து ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் அக்கும்பல் அலாரம் சிசிடிவி கேமரா மின் இணைப்புகளை துண்டித்து விட்டு திருடியதுவும் தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 05, 2025 11:59

தமிழகத்தில் காவல்துறையினர் நீண்ட தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் உள்ளனர். தினம் தினம் நாளிதழ்களில் குற்ற செய்திகள்தான் அதிகம் வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால், ஒரு சில குற்றங்கள் காவல்துறையினரே செய்கிறார்கள், மற்றும் காவல்துறையினர் உதவியுடன் / ஆசீர்வாதத்துடன் நடக்கிறது. அவர்களுக்கு உதவி புரிவது திமுக ஆட்சியில் உள்ள மந்திரிகள் மற்றும் பலர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை