உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு நலத்திட்ட உதவி வேண்டுமா? விபரம் சேகரிக்கும் ஆளுங்கட்சி!

அரசு நலத்திட்ட உதவி வேண்டுமா? விபரம் சேகரிக்கும் ஆளுங்கட்சி!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அதிருப்தியை சமாளிக்க, அரசு நலத்திட்ட உதவி விரும்புவோரின் முழு விபரங்களையும் அறியும் விதமாக, வீடு வீடாகச் சென்று, தி.மு.க.,வினர் படிவம் வழங்கி வருகின்றனர்.லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வீடுகள், வணிக நிறுவனங்களில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை தி.மு.க., தொண்டர்கள் ஒட்டினர். தற்போது, வீடு வீடாகச் சென்று, மாநில அரசின் நலத் திட்டங்களில் பயன்பெறும் படிவம் ஒன்றை, தி.மு.க.,வினர் வழங்கி வருகின்றனர்.அவற்றில், மாவட்டம், சட்டசபை தொகுதி, குடும்பத் தலைவர், ரேஷன் கார்டு எண், சொந்த வீடா அல்லது வாடகை வீடா, குடும்பத்தில் யாரேனும் அரசு பணியில் உள்ளனரா, வாக்காளர் அடையாள அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் கோரப்பட்டுள்ளன. அரசின் எந்த நலத்திட்ட உதவி வேண்டும் என குறிப்பிட்டு படிவம் பூர்த்தி செய்து வைத்துக் கொள்ளுங்கள்; மீண்டும் வந்து படிவத்தை பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்து உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை