உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் ரத்து என்பது சினிமா பஞ்ச் டயலாக் கிடையாது! நடிகர் விஜய்க்கு அமைச்சர் பதில்

நீட் ரத்து என்பது சினிமா பஞ்ச் டயலாக் கிடையாது! நடிகர் விஜய்க்கு அமைச்சர் பதில்

சென்னை; நீட் தேர்வு ரத்து என்பது சினிமாவில் யாரோ எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக் போல பேசுகின்ற சூழல் கிடையாது என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். மக்களை நம்ப வைத்து ஏமாற்றவேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது, அதற்கு நீட் சான்று என்று நடிகரும், த,வெ.க., தலைவருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4trdy26v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; நீட் தேர்வு என்பது ஏதோ இன்றைக்கு புதியதாக வந்தது அல்ல. ஒரு நீண்ட போராட்டம். தமிழக மக்கள் அனைவருக்கும் அது தெரியும். நீட் தேர்வு வந்த போது அதை கருணாநிதி தடுத்து நிறுத்தினார். அவர் மறைந்த பின்னர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆட்சியில் தான் அது (நீட் தேர்வு) நடைமுறைக்கு வந்தது. அதை எதிர்த்து எனது மாவட்டம் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்னுயிரை ஈந்து அதற்கான எதிர்ப்பை பதிவு செய்த பிறகு தான், தமிழக மக்கள் மனதில் நீட்டின் கொடூரம் குறித்து தெரிய ஆரம்பித்தது. எனவே, அதில் இருந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் தி.மு.க., தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஒரு கோடி கையெழுத்தை பெற்று ஜனாதிபதியிடம் உதயநிதி கொடுத்துள்ளார். இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம். மத்திய அரசை பொறுத்தவரை கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மருத்துவம் படித்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே அவர்களை எதிர்த்து நடைபெறுகிற இந்த போராட்டத்தில் மாநில அரசு நேரடியாக இதை (நீட்) நீக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே சட்டம் புரிந்தால் தான், நாட்டு நடைமுறை புரிந்தால் தான், அரசு நடைமுறை புரிந்தால் தான் பேச முடியும். சினிமாவில் யாரோ எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக் போல பேசுகின்ற சூழல் கிடையாது. இது ஒரு அரசு நடைமுறை. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Krishnamurthy Venkatesan
ஜன 11, 2025 23:50

நீட் தேர்வு வருவதற்கு முன் எத்தனை ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள், வந்த பின் எத்தனை ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள்/படிக்கிறார்கள் என்பதை அமைச்சர் அவர்கள் புள்ளி விவரத்துடன் தெரியப்படுத்திட வேண்டும். அப்போதுதான் அனைவரும் நீட் தேர்வு ரத்து குறித்து யோசிப்பர்


தனி
ஜன 11, 2025 20:30

அப்போ ஏன் வாக்குறுதி கொடுத்தீங்க???


Kumar
ஜன 11, 2025 19:54

அப்புறம் என்ன இதுக்கு நீங்க கூவிட்டு இருந்தீங்க நீட் ரத்துன்னு


S.V.Srinivasan
ஜன 11, 2025 16:55

யோவ் நீட் ரத்து சினிமா பஞ்ச் டயலாக் கிடையாதுன்னா என்ன முடிக்கு தேர்தல் சமயத்தில் வாக்குறுதி குடுத்தீங்க. நீட் தேர்வு மத்திய அரசின் கையில் இருப்பது அப்போ தெரியாத


Nandakumar Naidu.
ஜன 11, 2025 16:38

நீட் ரத்து என்பது எல்லாம் பன்ச் டயலாக் கிடையாது என்பது உங்களுக்கு தெரியாதே அமைச்சரே? எந்த ............ க்கு அந்த வார்த்தையை வீராப்புடன் பேசினீர்கள். செங்கல் திருடன் எங்கே? ஆளையே காணோம்.


Ramesh Sargam
ஜன 11, 2025 14:08

அமைச்சருக்கு தெரியவில்லை இன்று பல மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பு முடித்து சிறந்த மருத்துவர்கள் ஆகிறார்கள் என்று. அவரது மாவட்டம் அரியலூரில் கூட பல மாணவர்கள் நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவ படிப்பு முடித்து சிறந்த மருத்துவர்கள் ஆனார்கள் என்று அவருக்கும் தெரியும். திமுகவினர் வீண் வம்புக்கு நீட் தேர்வு முறையை ஏதிக்கிறார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 13:56

அரசியலில் காமெடி பீசுகள் அதிகமாயிட்டே போகுது. சீமான், அரஜன சம்பத், ராமதாஸ், கவர்னர், அண்ணாமலை, இப்போ விஜய். செமஜாலியா இருக்கு.


Haja Kuthubdeen
ஜன 11, 2025 15:24

அந்த ரகசியம் தெருஞ்சவர் பேரு விடுபட்டு இருக்கே இதில்....


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 11, 2025 16:28

வை குண்டா ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்டு ஒழிப்பு அப்டின்னு ஏமாத்தி உனக்கு 200 ரூவா தர கையெழுத்து போட்டுடாங்க


Ramesh Sargam
ஜன 11, 2025 19:53

Udaya Nidhi peyar illaiye…


சம்ப
ஜன 11, 2025 13:15

ரகசியம் தெரியும்னு ஒருத்தன் ஊர் ஊரகத்துனான் அவ என் செல்ல ர அமைச்சா


ராம்
ஜன 11, 2025 14:14

நீற் எல்லாம் ஒரு அமைச்சர். வெட்கக்கேடு


saiprakash
ஜன 11, 2025 14:16

நீட் தமிழ்நாட்டுல உள்ள வரவிட்ட ஆட்கள் யாருன்னு பாரு சரியா


S.V.Srinivasan
ஜன 11, 2025 16:57

அந்த ரகசியம் இப்போ மறந்து போய்டுச்சாம் அவனுக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை