உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: 4 வடங்கள் அறுந்ததால் பரபரப்பு

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: 4 வடங்கள் அறுந்ததால் பரபரப்பு

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது தேரின் 4 வடங்கள் அடுத்தடுத்து அறுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் தேரோட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது இரும்பு சங்கிலிகளை கொண்டு தேர் இழுப்பதற்கான பணி நடக்கிறது.தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்கான விழா, கடந்த 13ம் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து காலை 6:40 மணிக்கு தேரோட்டம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yf1vxau1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேரோட்டம் துவங்கியதில் இருந்து மூன்று வடங்கள் அறுந்து புதிய வடம் மாற்றப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தேரோட்டம் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் 4வது வடமும் அறுந்து தேர் மீண்டும் நிறுத்தப்பட்டது. எனவே தற்போது இரும்பு சங்கிலிகளை கொண்டு தேர் இழுப்பதற்கான பணி நடக்கிறது. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Manikandan Krishnamoorthy
ஜூன் 21, 2024 17:43

அது கோவில் பாலமா Bro?


Thiruvengadam Ponnurangam
ஜூன் 21, 2024 17:31

சீக்கிரம் ஒரு முடிவு கிடைக்கும் .. அந்த வடம் போல


அப்புசாமி
ஜூன் 21, 2024 17:01

தத்திகள் நாட்டில் எதுக்குமே கேரண்டி இல்லை.


pandit
ஜூன் 21, 2024 15:29

கோவில் கலெக்ஷன் அதிகாரிகளுக்கு கார் வாங்க செலவிடபட்டால் கோவில் பராமரிப்பு ஏது


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 13:37

நெல்லையப்பனுக்கே சிவன் கள்ளச்சாராய சாவுகள் பொறுக்கவில்லை .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 12:54

நெல்லையப்பனே பிறக்கவில்லை இந்த காட்டாட்சி ....


Kumar Kumzi
ஜூன் 21, 2024 12:48

கேடுகெட்ட விடியலின் ஆட்சி அழிப்பின் விழிம்பில் சீக்கிரம் ஒழியட்டும்


Ramesh Sundram
ஜூன் 21, 2024 12:15

Lowest Quotation with highest commission policy கயிறு வாங்குவதற்கு கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்க படும் இவர்களது ஆட்சியில் இரும்பு சங்கிலி கூட அறுந்து போகும்


sridhar
ஜூன் 21, 2024 10:53

வரலாற்றில் இல்லாத அளவு மழை தஞ்சாவூரில் பெய்ததால் நெல்லையப்பர் தேர் வடம் நைந்து விட்டது .


S Sivakumar
ஜூன் 21, 2024 10:46

தேர் வடம் அறுந்து நெல்லையப்பர் உணர்த்தும் கருத்து மன்னர் ஆட்சி நடைபெறாமல் ஸ்தம்பித்து உள்ளது. ஏனேனில் அக்கிரம தலைவிரித்து ஆடும் போது சாதரணமாக நடவடிக்கைகள் முலம் சரி செய்ய முடியாது. இரும்பு கரங்களால் தான் அடக்க முடியும்.


மேலும் செய்திகள்