உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்!

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: அரசு பள்ளி மாணவர்களில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வரும், 'வாசிப்பு இயக்க' திட்டத்திற்காக, புதிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், வெளியிடப்படும் இந்த புத்தகங்கள், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 10 பக்கங்கள் கொண்டதாகும். இதில், 5 பக்கங்கள் ஒவ்வொன்றும், மாணவர்களை ஈர்க்கும் வகையில் வண்ணப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.'கொடுக்கும் மரம்', 'அடிக்கும் மரம்', 'தியா எங்கே?', 'சந்தனக் கூடு', 'பண்டித ரமாபாய்', 'மாதியும் யானையும்', 'நத்தையின் ஆசை' ஆகிய புத்தகங்கள் வெளியீட்டுக்காக தயாராக உள்ளன.இது குறித்து, கோவை மாவட்ட பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கக் கருத்தாளர் அருளானந்தம் கூறுகையில், “மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம், கதை சொல்லுதலை ஊக்குவிக்க இந்த புத்தகங்கள் உதவும். கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்களை, வரும் 18ம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட உள்ளார். மாநில பள்ளிக்கல்வித்துறை, இந்த புத்தகங்களை அனைத்து அரசு பள்ளி மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bahurudeen Ali Ahamed
ஜூலை 15, 2025 13:43

பள்ளி வளாகத்திலேயே ஒரு சிறிய நூலகம் அமைத்து வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்,


A1Suresh
ஜூலை 15, 2025 12:07

ராஜிலா ரிஜ்வான், தியா எங்கே ? ஒரு ஹிந்து ஆசிரியர் கூட இல்லையா ?


அயோக்கிய திருட்டு திராவிடன்
ஜூலை 15, 2025 08:36

திருட்டு அயோக்கிய திராவிட மூதேவி கழகத்தைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ள புத்தகங்களை கொடுக்கலாம். அதனால் குழந்தைகளின் மூளை பல மடங்கு விரிவாகும். அதன் தலைவராக இருக்கும் பட்டி மன்ற தலைவருக்கு அனுமதி அளியுங்கள்


Sekar Times
ஜூலை 15, 2025 08:31

ஒன்ஸ் இட் வாஸ் called supplimentary reader.now reintroducing in anew name.


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 07:14

அப்படியே அந்த புத்தகங்களுடன் கட்டுமரக் கருணாநிதி எழுதிய ஒரு மரம் பூத்தது, நச்சுக் கோப்பை, வெள்ளிக்கிழமை, ஒரே இரத்தம், அப்றம் நெஞ்சுக்கு நீதி போன்ற காலத்தால் அழியாத அவரது காவியப் படைப்புகளும் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற ஏனையோர்களின் கருத்து...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை