தி.மு.க., அரசுக்கு சூட்டப்பட்ட புது பெயர்
மணல் கொள்ளை திட்டத்தை, தி.மு.க., அரசு மீண்டும் அரங்கேற்ற துவங்கியுள்ளது. தமிழக ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவது, கடல் நீர் உள்புகுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், பேராசை பிடித்த தி.மு.க., அரசு, அடுத்தடுத்து மணல் குவாரிகளை திறக்கிறது. தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைத்து, கருங்கல் ஜல்லி, எம்-சாண்ட் என, பல வழிகளில் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. தி.மு.க., ஆட்சியாளர்கள் தான் இந்த கொள்ளைகளை நிகழ்த்துவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கனிமவள கொள்ளையை முழுநேரத் தொழிலாக வைத்திருக்கும் தி.மு.க., அரசை, 'கனிமவளக் கொள்ளை அரசு' என்று அழைப்பது தான் சரியாக இருக்கும். - அன்புமணி தலைவர், பா.ம.க.,