செய்திகள் சில வரிகளில்...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க, 163 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 'சி மற்றும் டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு, 1,000; ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், கிராம உதவியாளர்களுக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.