செய்திகள் சில வரிகளில்
தமிழகத்தில், 26 தாசில்தார்களுக்கு, துணை கலெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் அமுதா வெளியிட்டுஉள்ளார். பதவி உயர்வு பெற்றவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர், தாட்கோ மாவட்ட அலுவலர் உட்பட பல்வேறு பணியிடங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஹிந்து சமய அறநிலைய துறையில், முதல்நிலை செயல் அலுவலர்கள் ஒன்பது பேருக்கு, உதவி ஆணையராக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கி, துறை செயலர் மணிவாசன் அரசாணை வெளியிட்டுள்ளார்.