உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தும், துணை நிலை மருத்துவம் சார்ந்த பட்டயம், சான்றிதழ் படிப்புகள் மற்றும் பக்கவாட்டுச் சேர்க்கையில் பி.பார்ம்., படிக்க, வரும் 23ம் தேதி வரை, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்திய கடலோர காவல் படையில், 170 பொது, 140 தொழில்நுட்பம், 20 உதவி கமாண்டன்ட் பணிஇடங்களுக்கு, https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக, வரும் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஹரியானா மாநில ஆசிரியர் தகுதி தேர்வுகள், வரும் 26, 27ம் தேதிகளில் நடக்க உள்ளதால், தேசிய தேர்வு முகமை, அன்று நடக்க இருந்த சி.எஸ்.ஐ.ஆர்., - யு.ஜி.சி., 'நெட்' தேர்வுகளை, 28ம் தேதிக்கு மாற்றி, https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உயர் கல்வி நிறுவனங்களில், உடல், மனம், உடை, பொருளாதாரம் உள்ளிட்டவை சார்ந்து, மாணவ - மாணவியருக்கு, 'ராகிங்' என்ற பெயரில் துன்புறுத்தல் ஏற்பட்டால், 1800 180 5522 என்ற தொலைபேசி எண்ணில், எந்த நேரமும் புகார் அளிக்கலாம் என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 16 டாக்டர் பணியிடங்களுக்கு, www.esic.gov.in/recruitments என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு, வரும் 19ல் நடக்கும். மேலும் தகவலுக்கு, deanmckkn.esic.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பில் சேர, வரும் 21 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு, www.iwiase.ac.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல், 31ம் தேதி வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ