செய்திகள் சில வரிகளில்
தொடக்க கல்விக்கு பின், இடை நிற்றலை குறைக்கும் வகையில், நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும், தேசிய கல்வி உதவித்தொகைக்கு, உரிய ஆவணங்களுடன் ஒரு முறை பதிவை செய்து, வரும் 30ம் தேதிக்குள், https//scholarships.gov.inஇணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலகாம். ஐ.ஐ.எம்., உள்ளிட்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான, 'கேட்' நுழைவுத் தேர்வு, நவ., 30ல் நடக்க உள்ளது. இதற்கு, வரும் 20ம் தேதி வரை, https://iimcat.ac.in எனும் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி, காரைக்கால், மாஹி பிராந்திய அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள, 190 பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்களுக்கு, https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, அக்., 27க்குள் விண்ணப்பிக்கலாம்.