செய்தி சிலவரிகளில்...
டில்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. டில்லியின் பல இடங்களி லேசான மழை பெய்தது. வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 92 சதவீதமாக இருந்த நிலையில் நாள் முழுதுமே இதமான சூழ்நிலை நிலவியது. காற்றின் தரக் குறியீடும் 81 என்ற அளவிலேயே நீடித்தது.புதுடில்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில், 'காந்தி தர்ஷன்' கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் பெட்டியை, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி துணைத் தலைவர் விஜய் கோயல் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். சுதந்திரப் போராட்டத்தின் போது, தேசத்தை ஒருங்கிணைக்கும் காந்தியின் பணிக்கு உறுதுணையாக இருந்த காந்தியின் புகழ்பெற்ற ரயில் பயணங்களின் அடையாளமாக இது அமைக்கப்பட்டுள்ளது.