உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ., சோதனை

தஞ்சை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ., சோதனை

மயிலாடுதுறை: தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு படையினர் என்.ஐ.ஏ. இன்று(ஆக.,1) காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

2019ம் ஆண்டு பாமக பிரமுகர் கொலை வழக்கின் தொடர்ச்சியாக அதிகாரிகள் நடவடிக்கை:-

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ், நிஜாமலி, ஷர்புதீன், முகமது ரிஸ்வான், அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை அப்போது காவல்துறையினர் கைது செய்தனர். மதமாற்றம் தொடர்பான மோதலில் ஏற்பட்ட கொலை என்ற காரணத்தால் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரழுந்தூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் அதிகாலை முதல் சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Vijay D Ratnam
ஆக 01, 2024 21:36

முடியாது முடியாது தஞ்சாவூர் மயிலாடுதுறைக்கு மட்டும் என்.ஐ.ஏ வந்துட்டு போனால் என்ன அர்த்தம். எங்க நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் வந்து நாலு நாள் தங்கிட்டு போங்க.


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:57

காலிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கும் சிறைக்கைதி MP க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களும் முன்னாள் முதல்வரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இங்கும் சிறுபான்மையினர் செயல் என்பதற்காக குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என மாநில அரசே காப்பாற்றுகிறது. நாடு தேறுமா?


Kumar Kumzi
ஆக 01, 2024 11:56

இந்த விஷ கிருமிகளை சுட்டுக்கொல்லுங்க


ஆரூர் ரங்
ஆக 01, 2024 10:25

தடை செய்யப்பட்ட சிமி தீவீரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இப்போது ஒரு எம்எல்ஏ. எந்தக்கட்சியின் சின்னத்தில் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஓராண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டும் சரணடையாமல் ஜாலியாக உலா வருகிறான்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 14:09

எந்த ஈ பி கோ வில் குற்றவாளிக்கு சரணடையாமல் பொது வாழ்க்கை வாழ உரிமை உள்ளது ???? காவல்துறை எதற்கு ???? கண்காணிக்கும் உமது மத்திய உள்துறை என்ன செய்கிறது ????


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 10:13

மென்மையான போக்கு கடந்த ஆட்சியிலும் இருந்தது... இந்த ஆட்சியில் ஊக்குவிப்பும் உண்டு...


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 09:47

மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் ....


Sriniv
ஆக 01, 2024 09:33

பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இடம் கொடுத்தது யார்? This is how Temple streets, over the years have become occupied by non Hindus who practice all sorts of things.


V.Rajamohan
ஆக 01, 2024 08:39

பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இடம் கொடுத்தது யார்? ஒரு சுயநல இந்து பணத்திற்கு விலைபோயிருப்பான். அக்ரகாரங்கள் பழம் பேரும் கோயில்கள் அழிந்தது இப்படித்தான். இந்துக்கள் இடப்பரிவர்த்தனையில் கவனமுடன் இருக்கவேண்டிய காலம்.


N.Purushothaman
ஆக 01, 2024 12:08

எல்லாம் கையை மீறி போச்சு... கும்பகோணம், தஞ்சாவூர், மாயவரம் போன்ற இடங்கள் எல்லாம் வேற மாதிரியா போய்கிட்டு இருக்கு...


பேசும் தமிழன்
ஆக 01, 2024 07:53

அத்தனை தேச விரோத சக்திகளும் ....தமிழ்நாட்டில் தான் தஞ்சமாகி இருக்கிறார்கள் போல் தெரிகிறது .....இங்கே நடக்கும் விடியல் ஆட்சி அவ்வளவு மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள் என்று அர்த்தம் !!!


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2024 08:48

மென்மையான போக்கு அல்ல. விடியல் அரசு கிறுத்தவ, முஸ்லிம் குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்று அர்த்தம்.


தமிழ்வேள்
ஆக 01, 2024 10:34

ஊக்குவிக்கிறது என்பதே சரியான கூற்று ...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி