உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம்மை எதிர்த்து யார் வந்தாலும் தி.மு.க., தான் வெற்றி பெறும்: உதயநிதி பேச்சு

நம்மை எதிர்த்து யார் வந்தாலும் தி.மு.க., தான் வெற்றி பெறும்: உதயநிதி பேச்சு

திருவெண்ணெய்நல்லுார்: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் நம்மை எதிர்த்து யார் வந்தாலும், எப்படிப்பட்ட கூட்டணி அமைத்தாலும் தி.மு.க.,தான் வெற்றி பெறும்' என துணை முதல்வர் உதயநிதி பேசினார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசு மூலம், கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்களுக்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணதிட்டம் மூலம் பெண்கள் மாதம், 900 முதல் 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றனர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த துவங்கியுள்ளன. பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர்.தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், என மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் மாதம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.தேர்தலுக்கு, 16 மாதங்களே உள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 100 சதவீத வெற்றி பெற்றோம். தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வெற்றி. வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் மதச்சார்பற்ற இண்டியா கூட்டணியே வெற்றி பெறும். நம்மை யார் எதிர்த்து வந்தாலும், எப்படிபட்ட கூட்டணி அமைத்தாலும், எந்த திசையில் இருந்து யார் வந்தாலும், ஏன் டில்லியில் இருந்து வந்தாலும் கூட, இனி தமிழகத்தில் தி.மு.க., தான் வெற்றி பெறும். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
நவ 06, 2024 23:38

விஜய் ஹான் காணவைய்ய கெடுக்கிறாரே. சில கனவுகளை வெளியில் சொல்ல கூடாது. கனவை வெளியில் சொல்லி கமலா ஹாரிஸ் கதையாகி விட போவுது


sankaranarayanan
நவ 06, 2024 20:32

சிலை வடித்தான் அந்த சின்னப்பெண்ணுக்கு என்று சினிமா பாடலைப்போன்று ஊர் ஊராக சென்று என்ன செய்கிறாரோ இல்லையே தாத்தாவின் சிலையை முதலில் திறந்துவிட்டுத்தான் திரும்புவார் அரசின் பணம் எங்கே எப்படி எல்லாம் செலவழிகிறது மக்களே பாருங்கள் இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்


என்றும் இந்தியன்
நவ 06, 2024 17:26

திமுக சொல்லும் வார்த்தையை சீமான் சொன்னது "கருவாட்டு சாம்பார்" அதாவது திராவிடத்தையும் தமிழையும் இணைத்து சொல்லும் திமுகவை பார்த்து இன்னொரு வார்த்தையில் அறிவாளி மு.,,,,, டாஸ்மாக்கினாடு "குடி"மகன்


Sridhar
நவ 06, 2024 14:08

யோவ், MGR உயிரோடு இருந்தவரை ஒங்க கட்சிய ஒரு ஓரமா படுக்க வச்சிருந்தாரு. அதேபோல் அம்மா உயிரோடு இருந்தவரை உங்க கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாம இருந்துச்சி. வெறும் 20 % ஓட்ட வச்சிக்கிட்டு, எப்பெல்லாம் மத்த கட்சிங்க பலவீனமாகுதோ அப்போ கூட்டணி போட்டுக்கிட்டு முக்கிமுனகி ஜெயிச்சிட்டு வரீங்க. IT விங் ஒண்ண வச்சுக்கிட்டு எதோ மொத்த தமிழ்நாடே ஒங்க பக்கம்ங்கறமாதிரி பில்ட் அப் கொடுத்தா உங்க பக்கத்தில நிக்கிற ஆட்கள் வேணும்னா நம்புவாங்க. தமிழக மக்கள் நம்பமாட்டாங்க மேலும் 26 ல உங்க கும்பலுக்கு சரியான பாடத்தை புகட்டுவாங்க. ஆனா உங்களுக்கென்ன, கொள்ளையடிச்ச பணத்தை அனுபவிக்க நேரம் கிடைச்சிச்சுனு போயி ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு அடுத்த வாய்ப்பு எப்போ வரும்னு காத்துட்டு இருப்பீங்க. உங்களை பத்தி தெரிஞ்சும் மீண்டும் மீண்டும் வோட்டு போடுற மக்கள் தான் பாவம்


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2024 12:34

இந்த வுஹான் வைரஸிற்கு வுதயநிதி என்று பெயர் பொருத்தமா இருக்குமோ ?


Ramesh Sargam
நவ 06, 2024 12:07

கேள்வி என்னவென்றால் திமுக, தனித்து, தில்லாக, எந்த கூட்டணியும் யாரிடமும் வைக்காமல் தேர்தலை சந்திக்குமா என்பதே? இதற்கு என்ன பதில் வாரிசு துணை முதல்வரே..??


chennai sivakumar
நவ 06, 2024 10:22

மூன்றீழித்தில் என் மூச்சு இருக்கும் என்று பாட்டு பாடி உங்கள் கட்சியை வளர்த்தவர் MGR அவர்கள். அதனால் உங்க வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு. அவ்வளவுதான்


வைகுண்டேஸ்வரன்
நவ 06, 2024 09:35

நாகரிகமற்ற சில கட்சித் தலைவர்கள், அசிங்கமாக சமூக ஊடகங்களில் பேசுபவர்கள் எழுத்துபவர்கள் இருக்கிற இந்த காலகட்டத்தில், டீசன்ட் டாகவும் அமைதியாகவும் பேசுகிறார் உதயநிதி. பாராட்டுக்கள்.


srinivasan
நவ 06, 2024 08:45

நன்றாக கனவு காணவும்


karthik
நவ 06, 2024 08:41

அப்படி எல்லாம் இல்லை.. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழமொழி சொன்ன தமிழனே 2 3 4 என்று பிரிந்து கிடக்கான் அதுனால உங்க கூட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.. ஊரை மேலும் பிளக்க தற்போது விசையை வேறு களமிறக்கியுள்ள்ளீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை