மோடி அரசை விமர்சிக்க தகுதியில்லை
மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை அடிமைகள் என்று கூறும் மன்னராட்சி நாயகன், இளவரசர் உதயநிதி, பாசிச கொடுங்கோலர்கள் ஹிட்லர், முசோலினி போல் பேசுவதை நிறுத்த வேண்டும். இனி ஒரு முறை பாசிச பா.ஜ., என்று, தி.மு.க.,வினர் உச்சரித்தால், மிக கடுமையான விளைவுகளை, அக்கட்சி சந்திக்க நேரிடும். உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக, மூன்றாவது முறையாக சரித்திர வெற்றி பெற்று, மக்கள் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி அரசின் பா.ஜ., ஆட்சியை, பாசிச பா.ஜ., ஆட்சி என்று கூற, உதயநிதிக்கு தகுதியில்லை. தமிழக மக்கள் தி.மு.க.,வினரை விரட்டி அடிக்க உறுதி பூண்டுள்ளதை அறிந்து, தேர்தல் வரை நல்லாட்சி நடத்தி, மக்களுக்கு நன்றியுடன் செயல்பட வேண்டும். - பிரசாத், செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,