உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்று நெல்லை; இன்று தென்காசி: தலை துண்டித்து விவசாயி படுகொலை

நேற்று நெல்லை; இன்று தென்காசி: தலை துண்டித்து விவசாயி படுகொலை

தென்காசி: நெல்லையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று (டிச.,21) தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபுள்ளையூரில் விவசாயி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.நெல்லையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?' என, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. நீதிமன்றம் முன் காலை நேரம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று காலை, 10:00 மணிக்கு நீதிமன்ற நேரத்தில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இன்று (டிச.,21) நெல்லைக்கு பக்கத்து மாவட்டமான, தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபுள்ளையூரில் விவசாயி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். போலீசார் உடலை மீட்டு, பிரதேச பரிசோதனை செய்ய, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயியை மர்மநபர்கள் கொலை செய்தது குறித்து, போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர். விரிவான விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Arasu
டிச 23, 2024 17:17

திருந்தாத நெல்லை மக்கள்..


raja
டிச 21, 2024 14:22

சட்டமடா... ஒளுங்குடா... திருட்டுடா திராவிடம் டா..மாடல்டா... அரசுடா..


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:46

ஒரிசா வில் ஸ்கூல் பையன் ஒருத்தன் ஸ்கூலுக்கு கத்தி எடுத்துண்டு வந்து இன்னொரு பையனை குத்திவிட்டான். இதுக்கும் திமுக காரணம் னு சொல்லுவாங்களோ??


raja
டிச 21, 2024 14:24

இவன் ஒருத்தன் தமிழகத்தை பற்றி பேசுடான்னா ஓடநே ஆப்பிரிக்காவை பார் அமெரிக்காவை பாருன்னு ஒன்கொள் கோவால் புற கொத்தடிமை கணக்கா கிளம்பிர்ரான்...


Gokul Krishnan
டிச 22, 2024 16:19

அது இருக்கட்டும் சைக்கிள் கேப்பில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் மூன்று மாதத்தில் இடிந்து விழுந்தது உங்க நட்பு கட்சியான கம்மிகள் கேரளாவின் மருத்துவ கழிவுகளை நெல்லையில் கொட்டியது பற்றியும் கொஞ்சமவது கருத்து சொல்லுங்க மறந்து விடாதீர்கள்.


karthik
டிச 21, 2024 11:31

திருநெல்வேலி மக்களே எங்க போட்டு இருக்கீங்க? அரசும், காவல்துறையும் ஒரு அளவுக்கு தான் பாதுகாக்க முடியும்...மக்கள் நீங்க பார்த்து கொண்டு இருந்தால். பொறுக்கி நாய்கள் வெளியே இப்படி தான் ப்ரிச்சனை செய்வார்கள்....


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:38

நல்ல கேள்வி. சிறந்த பதிவு.


sivakumar Thappali Krishnamoorthy
டிச 21, 2024 10:23

மக்களின் மனோபாவம் இப்படி மாறிவிட்டது காரணம் தெய்வபக்தி இன்மை. குடி , போதை ,தி மு க வின் ஹிந்து விரோத போக்கு .. போலீஸ் என்ன செய்யும் பாவம்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:44

இதில் எங்கே திமுக வந்தது? இங்கே ரெண்டு பக்கம் வெட்டிக்கிறவனும் ore மதம் தான். தமிழ் நாட்டில், 1400 கோவில்களில் குடமுழுக்கும், கும்பாபிஷேகமும் சிறப்புடன் நடத்திய திமுக இந்து விரோத கட்சி என்று சொன்னால் கிறிஸ்டியன், முஸ்லீம் மட்டுமல்ல, இந்துக்கள் கூட சிரிப்பார்கள். நெல்லை தமிழ் நாட்டின் ஆக்ஸ்போர்டு என்று பெயர் பெற்ற கல்வியாளர்களும் மாணவ மாணவியர்களும் இருந்த நெல்லை ஏனோ இப்படி ஆகிவிட்டது. போலீஸ் என்ன செய்ய இயலும்?


karthik
டிச 21, 2024 19:13

சாமி வைகுண்டேஸ்வரரே - காவல்துறையை பார்த்தா பொறுக்கி பயல்களுக்கு ஒரு பயம் வர வேண்டாமா. உங்க கட்சிகாரங்க, சட்ட மன்ற உறுப்பினர்கள் அடக்கி அடிமையா வச்சு இருந்தா அவங்க எங்க வேலை செய்றது, மக்களை பாதுகாக்கிறது? நியாயமா இருங்க - எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நியாயத்துக்கும், சாதாரண மக்களுக்காகவும் உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை