கைகொடுத்தது வடகிழக்கு பருவமழை அணைகள் நீர் இருப்பு 200 டி.எம்.சி.,
சென்னை: வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால், 90 அணைகளில், நீர் இருப்பு 200 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். இதி ல், மேட்டூர், பவானி சாகர், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் உள் ளிட்ட 15 அணை கள் மட்டும், 198 டி.எம்.சி., கொள் ளளவு கொண்டவை. மற்ற அணைகள், ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு கொண்டவையாக உள்ளன. பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு தென்மேற்கு பருவமழை காலங்களிலும், நீர்வரத்து கிடைக்கிறது. இதனால், கடந்த ஜூன் முதல், பல அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக கிடைத்தது. அவற்றில் இருந்து பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியதால், பல அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அவற்றின் கொள்ளளவும் கணிசமாக உயர்ந்தது. தற்போது, 90 அணைகளின், நீர் கையிருப்பு 200 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது. இது குறித்து, அணைகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீர்வளத்துறையின் 90 அணைகளில், 200 டி.எம்.சி., அளவிற்கு, அதாவது 89.3 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதில் 13 அணைகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், 22 அணைகள் 75 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. இவற்றில் இருந்து, பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், 22 அணைகளில், 50 முதல் 76 சதவீதம், 16 அணைகளில் 25 முதல் 51 சதவீதம், 17 அணைகளில் 25 சதவீதத்திற்கு கீழ் நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.