உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடனடி கட்டட அனுமதிக்கு கட்டண விபரம் அறிவிப்பு: கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88

உடனடி கட்டட அனுமதிக்கு கட்டண விபரம் அறிவிப்பு: கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சுயசான்று அடிப்படையில், 'ஆன்லைன்' முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விபரங்களை, நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2,500 சதுர அடி வரையிலான மனைகளில், 3,500 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு, சுய சான்று அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கட்டட அனுமதி நடைமுறைகள் எளிதாகி உள்ளதால், இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் பரிசீலனை கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிற வகை கட்டணங்களை எப்படி வசூலிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு:

உடனடி கட்டட அனுமதிக்கு ஒருங்கிணைந்த முறையில், கட்டணங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், மதுரை மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 88 ரூபாய்; தாம்பரம், சேலம், திருச்சி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 84 ரூபாய் கட்டணம். ஆவடி, திருநெல்வேலி, வேலுார், துாத்துக்குடி, ஈரோடு மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 79 ரூபாய்; தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலுார், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 74 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளில் எவ்வளவு கட்டணம்?

சிறப்பு நிலை, தேர்வு நிலை நகராட்சிகள் - ரூ.74 முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகள் - 70 சிறப்பு நிலை பேரூராட்சிகள் - 70 தேர்வு நிலை பேரூராட்சிகள் - 65 முதல் நிலை பேரூராட்சிகள் - 55 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் - 45 ரூபாய் ஊராட்சிகளில் அவற்றின் நிலைக்கு ஏற்ப சதுர அடிக்கு, 15 முதல் 27 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kajabakki bullah
ஆக 14, 2024 15:05

சூப்பர் Online process is an obstacles those who wants of bribery.no needs to calculate valuables of buildings,,like grocery flooring,teak woods etc....only for soft.Thanking you..


Jayaseelan Jayaseelan
ஜூலை 28, 2024 20:54

இந்தத் திட்டம் மிக நல்ல திட்டம் முதல்வருக்கு நன்றி சொல்கிறோம் ஆனால் ஏழைகள் கஷ்டப்பட்டு வீடு ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் ஏழை மக்கள் ஆயிரம் சதுர அடிக்குள் கட்டுபவர்களுக்கு ஒரு தொகையும் ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டுபவர்களுக்கு ஒரு தொகையும் சதுரடி விலை கம்மியாக கொடுக்க இந்த அரசு முடிவு செய்ய வேண்டும்


Karpagam Selvam
ஜூலை 28, 2024 18:22

தேரியது


BALAMURUGAN T
ஜூலை 28, 2024 11:11

ஒரு தளத்திற்கு 1750 ச அடி... அதிக பட்சமாக இரண்டு தளம்... மொத்தமாக 3500 ச அடி...


Pc durai Pc
ஜூலை 26, 2024 10:15

மாஸ்டர் பிளான் எங்கள் நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ளது எங்கள் மாவட்டத்திற்கும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா


Pc durai Pc
ஜூலை 26, 2024 10:06

எங்கள் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்க அலைய வேண்டியுள்ளது இந்த திட்டம் எங்கள் மாவட்டத்திற்கும் பொருந்துமா தகவல் ஏதும் உள்ளதா என தெரிவிக்கவும்


Ubaid
ஜூலை 25, 2024 06:38

லஞ்சத்தை முழுமையாக தவிர்க்கவும் தடுக்கவும் வேண்டும், விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் கிடைக்க வேண்டும் கட்டணம் செலுத்துவது எப்படி குடிநீர் வசதியும் கழிவுநீர் வெளியேற்றம் வசதியும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். சென்னையை போன்று கோவை மாநகராட்சியில் துரிதமாக டிரெய்னேஜ் வசதியை விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் சோக்பிட் முறையை நீக்க வேண்டும், மெட்ரோ ரெயில் விரைந்து செயல் படுத்த வேண்டும். சென்னையில் பார்க்கும் இடமெல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் இருப்பதை போல் விரைவில் கோவை, மதுரையில் ஏற்படுத்தி தர வேண்டும்..


GOPAL MURALI
ஜூலை 24, 2024 12:53

கட்டிட அனுமதி பணம் கட்டியவுடன் கிடைக்குமா அல்லது அங்கு அலுவலகம் சென்று பார்த்து வாங்கி வரவேண்டுமா.கணினி மூலம் ஒரு வாரத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எல்லா துறைகளுக்கும் கணினி மூலம் அனுமதி அளித்து இடை தரகர்கள் இல்லாமல் சான்று வழங்க வேண்டும்.


Gajageswari
ஜூலை 24, 2024 08:59

எந்த துறை அனுமதி வழங்கும். பஞ்சாயத்து சட்டத்தில் தலைவர் தான் அனுமதி வழங்கவேண்டும். பின்பு பிரச்சினை ஏற்படும் போது தலைவர் தான் கொடுக்கவில்லை என்று நோட்டீஸ் அனுப்ப முடியும். சட்டங்களில் திருத்தம் தேவை


அப்புசாமி
ஜூலை 24, 2024 08:42

சரி. இது அரசுக் கட்டணம் . இதைத்தவிர லஞ்சமாக எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்.பட்டுள்ளது?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை