உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழியர்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் அதிகாரி!

ஊழியர்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் அதிகாரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''கடைசி நேரத்துல, நிகழ்ச்சியில மாற்றம் செஞ்சதால ஏமாந்துட்டா ஓய்...'' என, பில்டர் காபியை பருகியபடியே, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த நிகழ்ச்சியை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சென்னை, தலைமை செயலகத்துல சமீபத்துல நடந்த விழாவுல, போலீசார் பயன்பாட்டுக்கு வாங்கிய விலை உயர்ந்த கார்களை, முதல்வர் ஸ்டாலின் அவாளிடம் ஒப்படைச்சாரோல்லியோ... இதே நிகழ்ச்சியில, நீர்வளத்துறை பொறியாளர்கள் பயன்பாட்டுக்கு வாங்கியிருக்கற 52 ஜீப்களையும் வழங்கவும் அதிகாரிகள் ஏற்பாடு பண்ணியிருந்தா ஓய்...''இந்த ஜீப்களை வாங்கிண்டு போறதுக்காக, மாநிலம் முழுக்க இருந்து பொறியாளர்களும், டிரைவர்களும் சென்னைக்கு வந்திருந்தா... ஆனா, கடைசி நேரத்துல, 'நீர்வளத் துறை வாகனங்களை இன்னொரு நாள் முதல்வர் தருவார்'னு சொல்லிட்டா ஓய்...''முதல்வருக்கு தொடர் நிகழ்ச்சிகள், வெளிநாடு பயணம் எல்லாம் இருக்கறதால, நிகழ்ச்சியை தள்ளி வச்சுட்டாளாம்... 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே'ன்னு பொறியாளர்கள் எல்லாம் புலம்பிண்டே ஊர் போய் சேர்ந்தா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''மும்மூர்த்திகளால தற்கொலை பண்ணிக்கிறதை தவிர வேற வழியில்லன்னு புலம்புறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருவள்ளூர் மாவட்ட அரசு போக்கு வரத்து கழகத்துல, மூணு அதிகாரிகள் ஆட்டம் ஓவரா போயிட்டு இருக்குது... இவங்க நினைச்சா தான், டிரைவர், கண்டக்டர்களுக்கு நல்ல டூட்டி கிடைக்கும் பா...''ரெகுலரா நல்ல டூட்டி வேணும்னா, மூணு மாசத்துக்கு ஒருமுறை, 10,000ல இருந்து 15,000 ரூபாய் வரைக்கும் இவங்களுக்கு தரணும்... 500 - 1,000 ரூபாய் குடுத்தால் தான், லீவு ஓகே பண்ணுவாங்க பா...''யாராவது எதிர்த்து பேசினா, 'உன்னால முடிஞ்சதை பார்த்துக்க'ன்னு அடாவடியா மிரட்டுறாங்க... 'இவங்க அநியாயத்தை யார்கிட்ட போய் சொல்றதுன்னு தெரியல... வேலையை ராஜினாமா செய்யணும் அல்லது தற்கொலை தான் பண்ணிக்கணும்'னு டிரைவர் ஒருத்தர் புலம்புற வீடியோ வேகமா பரவிட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''பாஸ்கர், நெடுஞ்செழியன், புண்ணிய மூர்த்தி எல்லாம் வராங்க... உட்கார இடம் கொடுங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''வீட்டு வேலைக்கு ரேஷன் கடை ஊழியர்களை பயன்படுத்துறாங்க...'' என்றார்.''யாருவே அந்த அதிகாரி...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழக அரசின் கூட்டுறவு துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியை தான் சொல்றேன்... இவங்க, ரேஷன் கடை ஊழியர்களை, தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துறாங்க...''அதாவது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குறது, காஸ் சிலிண்டர் எடுத்துட்டு வர்றது மாதிரியான வேலைகளை வாங்குறாங்க... ஊழியர்கள் ஏதாவது எதிர்த்து பேசினா, நடவடிக்கை எடுத்துடுவேன்னு மிரட்டியே வேலை வாங்குறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''ஹலோ யாரு... விஜயராணின்னு யாரும் இல்ல... சாரி, ராங் நம்பர்...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை