உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத கும்பலுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு: லஞ்ச ஒழிப்பு போலீசில் கான்ஸ்டபிள் புகார்

சட்டவிரோத கும்பலுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு: லஞ்ச ஒழிப்பு போலீசில் கான்ஸ்டபிள் புகார்

சென்னை : 'மணல் கடத்தல், போலி மது, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் சட்ட விரோத கும்பல்களுடன் கைகோர்த்துள்ள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர், மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரகம், ஊத்துமலை போலீஸ் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சைலஸ். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.இவர், 'தென்காசி மாவட்டத்தில், மணல் கடத்தல், போலி மது பாட்டில்கள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, பாலியல் தொழில் நடத்தும் சட்ட விரோத கும்பல்களுடன் கைகோர்த்துள்ள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.இதுதொடர்பாக, 'வீடியோ' பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2003ல், தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டேன். தற்போது, ஊத்துமலை போலீஸ் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிகிறேன்.தவறு செய்வோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் போன்றோர் காவல் துறையில் சேருகின்றனர். ஆனால், நடைமுறையில் அப்படியே தலைகீழாக உள்ளது. என்னால் போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறுகளை, பொறுத்துக் கொள்ள முடியவில்லை.யார் தவறு செய்தாலும், உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பேன். போலீஸ் அதிகாரிகள், சட்ட விரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், என்னிடம் உள்ளன. தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து அம்பலப்படுத்துவதால், மிகுந்த மன உளைச்சலுக்கும், துறை ரீதியான தண்டனைகளுக்கும் ஆளாகி இருக்கிறேன். இதற்கு முன், சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தேன்.அங்கு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர், 22 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை ஆதாரங்களுடன் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை. ஆனால், நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, மது பாட்டில் விற்பனையை அனுமதிப்பது, போக்சோ சட்டத்தில் கைதாக வேண்டிய நபர்களை விடுவிப்பது, பாலியல் தொழில் செய்ய நடத்தப்படும், 'ஸ்பா'க்களில் மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில், அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.இவர்கள் குறித்து, டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு, புகார் மனு அனுப்பி உள்ளேன். தவறுகளை சுட்டிக்காட்டினால், புகார் அளித்த போலீசார் மீதே நடவடிக்கை எடுக்கும் மனப்பான்மை தான் அதிகாரிகளிடம் உள்ளது. இதனால், விருப்ப ஓய்வு பெறும் மன நிலையில் உள்ளேன்.யாரிடமாவது, 500, 1000 ரூபாய் லஞ்சம் வாங்கும் கடை நிலை ஊழியர்களை கைது செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சட்ட விரோத கும்பல்களுடன் கை கோர்த்து, கோடிகளை குவித்து வரும் போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Barakat Ali
ஜன 08, 2025 10:01

அந்த கான்ஸ்டபிள் ஆரியரா? திராவிட மாடலின் பெருமைகளைப் பாராட்டாமல் புகார் செய்வதா??


SIVA
ஜன 08, 2025 08:58

பத்து ஆண்டுகளுக்கு முன்பு யூடூப்பில் ஒரு வீடியோ அதில் ஒரு இருபது வயது நபர் பைக் திருடிய போது மக்களிடம் பிடிபட்டான், நான் பைக் திருடி குறிப்பிட்ட இரண்டு போலீஸ் காரர்களிடம் கொடுத்து விடுவேன், அவர்கள் பைக் காணவில்லை என்று புகார் அளிப்பவர்களிடம் சில நாட்களில் உங்கள் பைக் கிடைத்து விட்டது, வழக்கு பதிவு செய்தால் நீங்களும் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும் எனவே எங்களுக்கு ஒரு பத்து ஆயிரம் கொடுத்து விடுங்கள் என்று ஏமாற்றி பணம் வாங்கி கொள்வார்கள், இவனுக்கு கொடுத்தது ஐநூறு இல்லை ஆயிரம் ரூபாய் மட்டுமே ........


அப்பாவி
ஜன 08, 2025 08:47

திருட்டு திராவிட மாடல் இதுதான். எல்லோரும் ஆட்டையப் போட்டுக்கோங்க.


Dharmavaan
ஜன 08, 2025 08:33

தலையே குற்றவாளி திருடன் ஆனால் கீழே இருப்பான் எப்படி உத்தமனாக இருப்பான்


சரக்கு ராஜா, டாஸ்மாக் நாடு
ஜன 08, 2025 08:03

இலவசம் இல்லாமல் மக்கள் இல்லை இலஞ்சம் இல்லாமல் அலுவலர்கள் இல்லை கொள்ளை இல்லாமல் திராவிடம் இல்லை.


Iniyan
ஜன 08, 2025 08:02

தி மு க ஆட்சியில் இருக்கும் எல்லாரும் திருடர்கள். இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்காது


Yes your honor
ஜன 08, 2025 07:57

பத்திரமாக இருங்கள் நண்பரே, உங்கள்மீது கஞ்சா கேஸ் பாயலாம், நீங்களும் பாத்ரூமில் தடுக்கி விழலாம். தமிழக காவல்துறை ஒரு கேடுகெட்டது. உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.


Kanns
ஜன 08, 2025 07:32

Good. Reward& Peomote him. Arrest-Prosecute-Convict All PowerMisusing Biased MegaLoot Police& Superiirs Without Mercy. Abolish Police Superiors as they Failed to Suoervise besides Indulging in Same Crimes


Dharmavaan
ஜன 08, 2025 06:49

உண்மையை சொல்பவருக்கு தண்டனை.திருடனுக்கு பதவி உயர்வு கேவலமான போலீஸ் துறை இவர்கள் எப்படி குற்றங்கள் குறைப்பான்கள்


visu
ஜன 08, 2025 06:46

இது என்ன பெரிய விஷயம் மக்களே லஞ்சத்தை ஏற்று கொண்டு விட்டார்கள் .என் மகளுக்கு அரசு ஊழியர் தான் மாப்பிள்ளையாக வேண்டும் கிம்பளமே பல லட்சம் வரும் என்று பெருமையாக பேசும் காலத்தில் உள்ளோம் யாரும் அதுக்கு வெட்கப்படவில்லை