உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசுபதீஸ்வரர் கோயில் நடராஜர் சிலை சேதம் மூடி மறைத்த அறநிலையத்துறை அதிகாரிகள்

பசுபதீஸ்வரர் கோயில் நடராஜர் சிலை சேதம் மூடி மறைத்த அறநிலையத்துறை அதிகாரிகள்

கரூர்:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் சோழ மன்னனர்களால் கட்டப்பட்டது. தமிழகத்தில் உள்ள தேவார பாடல் பாடப்பெற்ற, 274 சிவன் கோயில்களில், இது 211-வது ஆலயம். டிச.27ல் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக இங்கு நடந்தது. அப்போது, நடராஜர் சிலை சேதமடைந்ததை மறைத்ததாக, ஹிந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ஹிந்து முன்னணி கரூர் நகர துணைத் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:கரூர், பசுபதீஸ்வரர் கோயில் மூலவர் அருகில் உள்ள மகா மண்டபத்தில் சிவகாமசுந்தரி, சமேத நடராஜர் ஐம்பொன் சிலைகள் இருந்தன. ஆருத்ரா தரிசனத்தன்று அபிஷேகத்தை தொடர்ந்து, ராஜகோபுரத்திற்கு வெளியே சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனியாக எழுந்தருளினர்.அப்போது, சப்பரத்தில் ஏற்றும் போது, நடராஜர் சிலையின் கீழ் பகுதி உடைந்து இருந்தது. அதை கயிறு கட்டி, நடராஜர் திருவடியை அர்ச்சகர் கைகளால் பிடித்து வெளிப்பிரகாரம் வலம் வந்தார்.பின், கோயில் உள்ளே சப்பரத்துடன் கொண்டு சென்றனர். நடராஜரை பல்லக்கில் கொண்டு செல்லாதது குறித்து பக்தர்கள் கேட்டதற்கு, சரியான பதில் இல்லை.இந்நிலையில், கோயிலில் தரினம் செய்ய சென்ற பக்தர்கள், நடராஜ பெருமான் சன்னதியில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அதுபற்றி விசாரித்த போது, சுவாமி சிலையின் பாதம் உடைந்து விட்ட தகவல் தெரிந்தது. மேலும், பின்னமான நடராஜர் திருமேனியை ஊர்வலமாக சென்றிருப்பது ஆகம விதிமீறலாகும். இது குறித்து வெளியில் தெரிவிக்காமல் ஹிந்துசமய அறநிலையத்துறை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சரவணன் கூறுகையில்,'' கோயிலில் சுவாமி புறப்பாடு முடிந்த பின், சிலை சேதமடைந்தது தெரிந்தது. இதனால் ஆகம விதிப்படி, பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது.''இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை- -ஸ்தபதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று பார்வையிட்டார். அவரது ஆலோசனையின் படி நடராஜர் சிலை சரி செய்து மீண்டும் வைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை