உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐயோ நெஞ்சு வலிக்குதே... அலறிய மேயர்; கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி!

ஐயோ நெஞ்சு வலிக்குதே... அலறிய மேயர்; கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கும்பகோணம்: கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் மேயர் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி அலப்பறை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருகிறார் சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்., கட்சி மேயராக உள்ள இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=asztt8ly&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களுக்கான கோப்புகளை தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறிய மேயர், அவரது அறைக்குச் செல்ல முயன்றார்.இதனையறிந்து வேகமாக ஓடிச்சென்ற தட்சிணாமூர்த்தி, மேயர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மேயர் சரவணன் செய்வதறியாது திகைத்தார்.அப்போது மேயர் சரவணன் திடீரென மாமன்ற அலுவலகத்தின் தரையில் படுத்தபடி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாக அலறினார். பதறிப்போன கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, மேயர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.கோப்புகளைக் கேட்டால் நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என்று மேயர் நடிப்பதாக தட்சிணாமூர்த்தி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் விமர்சித்தபடி நடையைக்கட்டினர்.'ஐயோ நெஞ்சு வலிக்குதே' என்று மேயர் தரையில் படுத்து அலறிய சம்பவம் கும்பகோணம் மாநகராட்சியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Tetra
டிச 31, 2024 18:17

ஈடி ரெய்ட்னு போன் வந்ததோ.


Puratchi Thondan
டிச 31, 2024 11:27

மாரடைப்பிலிருந்து காக்கும் defibrillator இயந்திரத்தை இவரைப் போன்ற முக்கியஸ்தர்களுக்கு உடனடியாகப் பயன்படுத்தி ஷாக் கொடுக்க வேண்டும்.


duruvasar
டிச 31, 2024 09:58

இவனுக்கெல்லாம் அப்பனே அந்த அணில் அமைச்சர்தான்.


N.Purushothaman
டிச 31, 2024 08:41

இந்த ஆளு காலஞ்சென்ற கட்டுமரத்தையே மிஞ்சிட்டாரு ......


D.Ambujavalli
டிச 31, 2024 06:49

இனி எந்த கூட்டத்திலும் ஒரு மருத்துவர் இருந்து நெஞ்சுவலி உண்மையை கண்டறிய வேண்டுமென்று உத்தரவிட்டுவிடலாம் அதேபோல் ரெயிடுக்கு செல்லும்போதும் மருத்துவருடன் sellavendum


நிக்கோல்தாம்சன்
டிச 31, 2024 06:42

ஐயோ கொல்லுறாங்களே என்று டப்பிங் வாய்ஸ் கொடுக்கவில்லையே


raja
டிச 31, 2024 02:36

கரூர் கம்பனி பாட்டிலுக்கு பத்து ருவா அணிலார்தான் நெஞ்சுவலி நாடகம் நடத்த முடியுமா... நாங்களும் நடத்துவோம்ள்ள....ஆனா மங்குனி ஆன பிறகு நெஞ்சு வழி வருவதில்லை அது ஏனோ தெரிவது இல்லை


Raja
டிச 31, 2024 01:12

முத்தமிழ் வித்தவர் ஏனொ நினைவுக்கு வருகிறார்


தமிழ்வேள்
டிச 30, 2024 21:17

மேயருக்கு ஒரு பைபாஸ் ஆப்பரேசன் தேவை உடனடியாக.....


ديفيد رافائيل
டிச 30, 2024 21:12

ஒருநாள் நிஜமாகவே நெஞ்சு வலி வரப் போகுது, வழக்கமான drama ன்னு சொல்லி யாருமே HELP க்கு வர மாட்டாங்க. இது கண்டிப்பா நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை