உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய பஸ்கள்பெண் எம்.எல்.ஏ., விரக்தி

பழைய பஸ்கள்பெண் எம்.எல்.ஏ., விரக்தி

சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., தமிழரசி: இளையான்குடியைச் சுற்றி அதிக கிராமங்கள் உள்ளன.அத்தியாவசிய தேவைக்காக மக்களும், கல்விக்காக மாணவர்களும், இளையான்குடியில் இருந்து பரமக்குடி செல்கின்றனர். இங்கு இரண்டு நடைகள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆறு நடைகள் இயக்கப்பட வேண்டும். கீழடி அருங்காட்சியகத்திற்கு செல்வதற்கு வசதியாக மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் விடப்பட்ட பழுதடைந்த பஸ்களை மாற்றி தர வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: இளையான்குடி - பரமக்குடி இடையே பள்ளி மாணவர்கள் வசதிக்காக காலை மற்றும் மாலை நான்கு நடைகள் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கூடுதலாக இரண்டு நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3500 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஒவ்வொரு வாரமும் புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. அவ்வாறு வரும் போது பழைய பஸ்கள் மாற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஏப் 02, 2025 18:21

இருக்காதே...புது பிங்க் பெயிண்ட் அடிச்சு லிப்ஸ்டிக் போட்டு அனுப்பிச்சோமே... அது கூட செய்யாம கணக்கு காமிச்சுட்டாங்களா தெய்வமே?...