முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
திருச்சி: கர்நாடக மாநில பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக திருச்சி முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. கொள்ளிடத்தில் 70,400 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிளை வாய்க்கால்களில் 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக முக்கொம்பு காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.