உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயிலுக்கு சுருண்டு விழுந்து ஒருவர் பலி

வெயிலுக்கு சுருண்டு விழுந்து ஒருவர் பலி

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் கணேசன் 50. ஓட்டலில் இரவு காவலாளியாக பணியாற்றினார். நேற்று ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்திற்கு வந்தார். வெயில் பாதிப்பால் அலுவலகத்திற்குள் வரும் போது சுருண்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து காப்பாற்ற முயற்சித்தனர். எனினும் அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !