உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற வங்கி மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஜெயக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜெயக்குமாரின் தற்கொலை கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 11-ஆம் தற்கொலை ஆகும்.திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 88 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர். இது மிகவும் கவலையளிக்கிறது.ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது. அதை உறுதி செய்யும் வ்கையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஏப் 02, 2025 22:07

பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பணம் கிடைத்தால் வெளியே சொல்வதில்லை. நஷ்டம் அடையும்போது மட்டும் தற்கொலை செய்கின்றனர். இதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? இது மட்டுமன்றி சாலை விபத்துகள், கோபத்தில் நடக்கிற கொலைகள், அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிற எதிர்பாரா மரணங்கள்... இப்படி எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறுவதே எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது. மக்களை தவறான பாதையில் திசை திருப்பி குளிர்காய நினைப்பதே இந்த அரசியல்வாதிகள் தான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை