உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்; காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது.மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக திமுக அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்.வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து 'முன் செல்லடா...' என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழகத்துக்கு அர்ப்பணித்துள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sankaranarayanan
டிச 22, 2025 00:16

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின் அது முற்றிலும் உண்மைதான் ஓங்கொளிலிருந்து ஓடிவந்து கள்ளத்தனமாக டிக்கெட்டே வாங்காமல் ரயிலில் ஏறி சென்னை வந்தவர்களுக்கு வரலாறு என்றால் ஒன்றுமே தெரியாது தான்


sankaranarayanan
டிச 22, 2025 00:16

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின் அது முற்றிலும் உண்மைதான் ரயிலில் ஏறி சென்னை வந்தவர்களுக்கு வரலாறு என்றால் ஒன்றுமே தெரியாது தான்


N S
டிச 21, 2025 18:57

கணக்கு எங்கோ இடிக்குதே


திகழ் ஓவியன்
டிச 21, 2025 15:41

அப்போ, உங்களால் நிச்சயம் வரலாறு படைக்க முடியாது...சரிதானே அய்யா...


Muralidharan S
டிச 21, 2025 15:24

அப்புறம் எங்கே வரலாறு பூகோளம் எல்லாம் படைப்பது.. ??/


Manokaran
டிச 21, 2025 13:45

அண்ணே வனவாசம் என்ற வரலாற்று நூலை படித்துள்ளீர்களா


Ramesh Sargam
டிச 21, 2025 12:59

திருட்டு திமுகவின் வரலாற்றை தமிழக மக்கள் சரியாக படிக்கவில்லை. ஆகையால்தான் இன்று இந்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.


பெரிய ராசு
டிச 21, 2025 12:36

உங்களுடைய திருட்டு திமுக வரலாறு எல்லாருக்கும் தெரியும் 2026 உடன் உங்களுடைய திருட்டு திராவிடய கட்சி சூரசம்காரம் செய்யப்படும் ...


N. Ramachandran
டிச 21, 2025 12:33

நம்பிட்டோம்... விடியலார் வரலாறு தானே ?


KRISHNAVEL
டிச 21, 2025 12:29

வரலாற்றை படிப்பவர்கள் வரலாற்றை திரிக்கத்தான் முடியும் , வரலாறு படைக்க வேண்டும் என்றால் கடுமையாக தொடர்ச்சியாக புத்திசாலி தனத்துடன் உழைக்க வேண்டும் யாருப்பா வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதிக்கொடுப்பது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை