உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கலை கொண்டாட ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்!

பொங்கலை கொண்டாட ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உதகை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி மலை ரயில் 2 நாட்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை விரைவில் வர உள்ளதால் ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ijbcvf5s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, ஜன.16, 18ம் தேதிகளில் மேட்டுப்பாளையம்-ஊட்டி, சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 16ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25க்கு சென்று சேரும். மறுமார்க்கமாக ஜன.17 மற்றும் 19ம் தேதிகளில் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20க்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு ஜன.16 முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து காலை 8.20க்கு புறப்பட்டு, 9.40க்கு ஊட்டி வரும்.பின்னர் ஊட்டியில் இருந்து மாலை 4.45க்கு புறப்பட்டு மாலை 5.55க்கு குன்னூர் சென்று சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ