கோவை: ''ஓ.பி.எஸ்., தினகரனுடன், அ.தி.மு.க., இணைய வாய்ப்பில்லை,'' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச்செயலர் கவுதமி தெரிவித்துள்ளார்.தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கோவை வந்த நடிகையும், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச்செயலருமான கவுதமி அளித்த பேட்டி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது நல்ல முடிவு. இக்கூட்டணி, தி.மு.க.,வை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. ஓ.பி.எஸ்., - டி.டி.வி., தினகரனுடன் அ.தி.மு.க., இணைய வாய்ப்பு இல்லை. அமைச்சர் பொன்முடி, பொதுமேடையில், பெண்களை அவதுாறாக பேசிவிட்டு, மன்னித்துக் கொள்ளுங்கள் என்றால், அதை ஏற்க முடியாது. தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து, நான் கூறி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சொத்து வரி, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்றவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதுபோல, 2026ல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.