உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை வெட்டுகளை கண்காணிக்க புதிய ஆப் அதிகாரிகளை சேர்க்க உத்தரவு

சாலை வெட்டுகளை கண்காணிக்க புதிய ஆப் அதிகாரிகளை சேர்க்க உத்தரவு

சென்னை:தொலைத்தொடர்பு, இணைதள சேவைகளுக்கான கேபிள்களை கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் சாலை வெட்டு பணிகளை கண்காணிக்க மத்திய அரசு உருவாக்கியுள்ள, 'சி.பி.டி.யு.,' ஆப்பில் சேர தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மின்சார கேபிள்கள், தொலைபேசி, இணைய மற்றும் தொலைக்காட்சி கேபிள்கள் பிரதான சாலைகளில் புதைவட முறையில் கொண்டு செல்லப்படுகின்றன.இதற்காக பல்வேறு சாலைகளில் வெட்டு பணிகள், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு, அந்தந்த பகுதிக்கான உள்ளாட்சி அமைப்பில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெறும் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை, பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு கண்காணிக்க வேண்டும்.இதற்காக மாநகராட்சி, நகராட்சி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இக்குழுக்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படாததால், சாலை வெட்டு பணிகளில், பல்வேறு தவறுகள் நடக்கின்றன.ஒவ்வொரு துறையும் வெவ்வெறு சமயங்களில், வரைமுறை இன்றி பணிகளை மேற்கொள்வதால், சாலைகள், குண்டும் குழியுமாக மாறி வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:சாலை வெட்டு பணிகளை கண்காணிக்க, மத்திய தொலை தொடர்பு துறை சார்பில், 'தோண்டுவதற்கு முன் அழையுங்கள்...' என்ற பொருள்படும் வகையில், சி.பி.யு.டி., என்ற பெயரில், புதிய மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சாலை வெட்டு பணிகளை மேற்கொள்ளும் துறைகள், நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதில் பணிகளை கண்காணிப்பதற்கு, துறை வாரியாக பொறுப்பு அதிகாரிகளை சேர்க்க வேண்டும்.இதற்கான அதிகாரிகளை, தேர்வு செய்து தெரிவிக்குமாறு, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகத்துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சி துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., போக்குவரத்து குழுமம் ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த துறைகள் பரிந்துரைக்கும் நபர்கள், கண்காணிப்பு பணிக்காக புதிய ஆப்பில் சேர்க்கப்படுவர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை