உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல்சார் உயரடுக்கு படை சென்னையில் அமைக்க உத்தரவு

கடல்சார் உயரடுக்கு படை சென்னையில் அமைக்க உத்தரவு

சென்னை:சென்னையில் கடலா மைகள் பாதுகாப்பு மற்றும் கடலில் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதை தடுப்பது போன்ற நோக்கங்களுக்காக, கடல் சார் உயரடுக்கு படை அமைக்க, வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நவ., முதல், ஏப்., வரையிலான காலத்தில், அதிக அளவில் கடலாமைகள் முட்டையிட கரைக்கு வருகின்றன. கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் கடலாமைகள் இறந்தன. இதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'சென்னையில் கடல்சார் உயரடுக்கு படை அமைக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில், ராமேஸ்வரம் - மன்னார் வளைகுடா பகுதிகளில், கடல் சார் உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, கடல்சார் உயரடுக்கு படை அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, சென்னையில் கடல் சார் உயரடுக்கு படை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சென்னையை மையமாக வைத்து, கடல்சார் உயரடுக்கு படை அமைக்க, 96 லட்சம் ரூபாயை விடுவித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இதை பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்கடல் படகு கள் வாங்கப்படும். இதில் இடம் பெறும், 12 பேருக்கு ஊதியம் வழங்க, 19.80 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், 16.20 லட்சம் ரூபாய் நவீன கருவிகள் வாங்கவும், 36 லட்சம் ரூபாய் எரிபொருள் செலவுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உயரடுக்கு படையினர், சென்னையில் ஐந்து கடல் மைல் தொலைவுக்கு, கண்காணிப்பில் ஈடுபடுவர். கடலாமைகள் பாதுகாப்பு, சட்ட விரோத மீன்பிடித்தலை தடுப்பது, அவர்களின் பிரதான பணியாக இருக்கும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை