உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயற்கை விவசாயமே இந்த நூற்றாண்டின் தேவை: பிரதமர் மோடி

இயற்கை விவசாயமே இந்த நூற்றாண்டின் தேவை: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' இயற்கை விவசாயம் இந்த நூற்றாண்டின் தேவை.இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.,'' என பிரதமர் மோடி கூறினார்.கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:விவசாயிகள் பேசியதை உணர முடிந்தது. புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகள் துண்டை சுழற்றியதை பார்க்கும் போது, பீஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jrsnrwq3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நாட்டிற்கு பங்களிப்பு

கோவையில் மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனை நான் தலைவணங்குகிறேன். கலாசாரம், கனிவு ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கி கொண்ட மண் கோவை. தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை திகழ்கிறது. ஜவுளித்துறையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்கிறது.தமிழகத்தின் விவசாயிகளின் துணிச்சலை பாராட்டுகிறேன். இங்கே எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டிற்கு வழிகாட்டுகிறார்.

கிராம பொருளாதாரம்

இயற்கை விவசாயம் சிறப்பானது. எனது மனதுக்கு நெருக்கமானது. இந்த மாநாட்டிற்கு வராமல்போயிருந்தால் நான் பல விஷயங்களை கற்காமல் போயிருப்பேன். இயற்கை விவசாயத்தின் மையமாக இந்தியா மாறுகிறது. நமது இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமாக்கி வருகின்றனர். இதனால், கிராம பொருளாதாரம் மேம்படும்.இந்திய விவசாயத்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாய ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழும். உலக அரங்கில் முக்கிய இடம்பெறும். இயற்கை வேளாண்மை இந்த நூற்றாண்டின் தேவை.

விவசாயிகளுக்கு பலன்

விவசாயிகள் கடன் அட்டை மூலம் இந்தாண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. 9 கோடி விவசாயிகளுக்கு 21வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் நிதியுதவி திட்டத்தால் பலனடைந்த விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் அதிகளவு பயன்படுத்துவதன் காரணமாக மண்ணின் வளத்தை பாதித்துள்ளது.விவசாய செலவினமும் அதிகரிக்கிறது. இதற்கான தீர்வு இயற்கை வேளாண் மட்டுமே. இயற்கை விவசாயம் இந்த நூற்றாண்டின் தேவை. மண்ணின் வளத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

நமது பாரம்பரியம்

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஒரே தீர்வு. அரசின் திட்டங்களினால் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்தனர். இதனால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றத்தை தென் மாநிலங்களில் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடக்கிறதுஇயற்கை விவசாயம் என்பது நமது சுதேசியின் ஒரு பகுதி. இதனை எங்கிருந்தும் பெறவில்லை. இறக்குமதி செய்யவில்லை. நமது பாரம்பரியத்தை சேர்ந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. தென்னிந்திய விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்தின் பாரம்பரியங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்றவற்றை நிரந்தரமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நாடு முழுதும்

இயற்கை வேளாண்மையோடு சிறுதானியங்களைப் பயிர் செய்வதையும் இணைக்க வேண்டும். இவை பூமித்தாயின் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை செய்கின்றன.நம் தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவையும் படைக்கிறோம். தமிழகத்தில் கம்பும், சாமையும், கேரளா, கர்நாடகாவில் ராகி, தெலுங்கு மக்களிடம் சப்ஜா, ஜொன்னா ஆகியவை பல தலைமுறைகளாக நம் உணவுப் பழக்கத்தோடு ஒன்றுகலந்தவை. நமது இந்த சூப்பர் உணவானது, உலக சந்தைக்கு சென்று சேர வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம், ரசயானமற்ற விவசாயம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. விவசாயத்தில் வாழும் பல்கலையாக தென் மாநிலங்கள் திகழ்கின்றன.கேரளா மலை பகுதிகளில் பல அடுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை பாக்கு மரம் இடையே ஊடுபயிராக மிளகு உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. ஒரு பயிர் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் மாற வேண்டும். ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடி முறையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

தன்னிறைவு

தென் மாநிலங்கள், விவசாயத்தின் வாழும் பல்கலையாக விளங்கி வருகிறது. உலகின் மிகப்பழமையான, இன்றும் செயல்பட்டு வரும் அணைகள் இப்பகுதியில் உள்ளன. 13ம் நூற்றாண்டில் காலிங்கராயன் கால்வாய் உருவாக்கப்பட்டது. கோவில்களில் பரவலாக்கப்பட்ட நீர் சேகரிப்பு முறைகள், குளங்கள் நீர்நிலைகள் முன் மாதிரியாக விளங்குகின்றன.இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவியல் பூர்வமாக நீர்ப் பொறியியல் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் தேசத்திலும் சரி, உலகிலும் சரி, இயற்கை விவசாயத்துக்கு தலைமை ஏற்பது எனில், அது இந்த நிலப்பகுதிதான் என்பது என் அசையாத நம்பிக்கை. வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக, வருங்கால விவசாய சூழல் அமைப்பினை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும். நம் நாட்டின் அனைத்து விவசாயிகள், அனைவரும் 'ஒரு ஏக்கர்- ஒரு பருவம்' என்பதில் இருந்து தொடங்குங்கள்.ஒரு பருவத்தில், ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்குங்கள், அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பயன்களைப் பொறுத்து, இயற்கை விவசாயத்தை விரிவாக்கம் செய்யுங்கள்.இயற்கை விவசாயத்தை, வேளாண் பாடத்திட்டத்தில் முக்கியமான அங்கமாக்குங்கள். கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளின் வயல்களை உங்களின் பரிசோதனைக் கூடங்களாக மாற்றுங்கள் என அறிவியலாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் எப்படியாவது இயற்கை விவசாயத்தை, அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும்.இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்தில், மாநில அரசுகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் மன்றங்களின் பங்களிப்பு மகத்தானது. கடந்த சில ஆண்டுகளில் 10 ஆயிரம் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. உழவர் உற்பத்தியாளர் மன்றங்களின் உதவியோடு, விவசாயிகளின் சிறு சிறு குழுக்களை உருவாக்கியிருக்கிறோம். மின்னணு சந்தை, இணையவழி சந்தையில் நேரடியாக இணைக்க வேண்டும். இதன் வாயிலாக இயற்கை விவசாயிகளுக்கு மேலும் லாபம் கிடைக்கும் சாத்தியம் உண்டாகும்.இம்மாநாடு தேசத்தின் இயற்கை விவசாயத்துக்கு புதிய திசையைக் காட்டும். இங்கு பிறக்கும், புதிய கருத்துகள் எண்ணங்கள் மூலமாக புதிய தீர்வுகள் பிறக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சிறுமிகளின் பதாகையை கேட்ட பிரதமர்

மாநாட்டில் இரண்டு சிறுமிகள் பதகைகள் ஏந்தி நின்றனர். அதில் ' நான் பட்டம் பெறும்போது இந்தியா 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும்' எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கவனித்த பிரதமர் மோடி, அந்த பதாகையை உன்னிப்பாக கவனித்ததாகவும், அதனை வாங்கி வரும்படி பாதுகாப்பு படையினரிடம் கூறினார்.

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி

கோவையில் இன்று நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாடு முழுதும் உள்ள ஒன்பது கோடி விவசாயிகள் வங்கி கணக்குகளில், 18,000 கோடி ரூபாய் நிதியை விடுவித்தார். கோவை வந்த மோடி, கொடிசியா அரங்கில், தென் மாநில இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளையும் பிரதமர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், நாட்டில் உள்ள ஒன்பது கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில், வங்கி கணக்குகளில், பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ், 18,000 கோடி ரூபாயை விடுவித்தார். இம்மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த, 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பல்வேறு சாதனை படைத்த கேத்தனூர் பழனிசாமி, தங்கவேலு, அமீர் ராஜ் உள்ளிட்ட 10 விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N S
நவ 19, 2025 17:31

விவசாயமும், விவசாயியும் முன்னேற ஊடு பயிர் சாகுபடி மிகவும் தேவை. கூர் நோக்கு பேச்சு. அவரது கருத்து, "விவசாயிகள் துண்டை காட்டியதை பார்க்கும் போது, பீஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது", நிச்சயமாக துண்டை சீட்டு நம்பி இருப்போருக்கு பேதி உண்டாகும்.


RAMESH KUMAR R V
நவ 19, 2025 17:06

இயற்கை விவசாயம் உலக அரங்கில் ஒரு புதிய கண்ணோட்டத்துக்கு வழிவகுக்கும்.


MUTHU
நவ 19, 2025 18:05

இதெல்லாம் அந்தந்த மாநில அரசுகள் மனது வைத்தால் தான் நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை