உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி

தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் நாளை பங்கேற்கும் உண்ணாவிரதத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திருப்பரங்குன்றம் பிரபு தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை டிச., 1ல் உத்தரவிட்டது. இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் அனுமதி கேட்டோம்; அனுமதி தரவில்லை. எனவே, டிச., 13ல் உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: உண்ணாவிரதம் நடத்த, நாளை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது;50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பாரதி
டிச 12, 2025 15:43

இந்த நாட்டின் மேல் படையெடுக்க வந்தவன் பாபர் இந்த நாட்டின் பெண்களை கற்பழித்தவன் இந்த நாட்டின் குழந்தைகளை கொலை செய்தவன் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை வெட்டி கொன்றவன் அவனுக்காக இந்த நாட்டின் குடிமக்கள் அதை பாராட்டி ஒரு மசூதி கட்டுகிறார்கள் என்றால் அந்த பாபரை ஒரு ஹீரோவாக தன் தலைவனாக நினைக்கிறார்கள் என்றால் இது எப்படி நியாயம் ஆக முடியும் என்பதை மதிப்பிற்குரிய நீதித்துறை தெரிவிக்க வேண்டுகின்றேன் நீதித்துறை சுயமாக இதை ஏன் தடுப்பது இல்லை நீதித்துறை ஏன் இதற்கெல்லாம் யாரோ ஒரு நல்லவன் பொதுநல வழக்கு தொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது நீதித்துறையில் யாரும் நல்லவர்கள் இல்லையா இதற்கு அதனிடம் உரிய நீதி இல்லையா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன் ஒருவேளை இந்த நாடு அன்னியர்களால் படையெடுக்கப்பட்ட ஆக்ரமிக்கப்பட்டால் கூட இந்த நாட்டின் நீதிமன்றம் வேடிக்கைதான் பார்க்கும் போல இருக்கிறது என்று பயம் ஏற்படுகிறது இவர்களுக்கு சம்பளம் வாங்க தான் ஆர்வம் இருக்கிறதோ நாட்டுப்பற்று இல்லையோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது நீதித்துறை இதைப் பற்றி விளக்கம் கொடுத்து மக்களின் மனதிற்கு சமாதானம் செய்ய வேண்டுகிறேன்


Barakat Ali
டிச 12, 2025 10:36

இஸ்லாமியர்களை தாஜா செய்வதாக நினைத்து பெரும்பான்மையினரைப் பகைக்கிறது திமுக ......


Tamil Inban
டிச 12, 2025 10:27

என்ன மந்திரம் சொல்லனும்


Kasimani Baskaran
டிச 12, 2025 10:06

தீம்காவின் இந்து மத வெறுப்பை எதிர்ப்பவர்கள் ஒரு நாள் வீட்டுக்கு முன் விளக்கேற்றலாம். குறைந்த பட்சம் தலைமை நீதிபதிக்கு ஒரு போஸ்ட் கார்ட் அல்லது ஒரு பதிவுத்தபாலில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம். கார்த்திகை மாதம் கார்த்திகேயனுக்கு உகந்தது. முழுவதும் கூட விளக்கேற்றலாம். அகல்விளக்கு செய்யும் நாலு பேர் வாழ்வார்கள்.


Rajarajan
டிச 12, 2025 09:32

தவறு செய்பவரைவிட, தவறு செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம். மலை மீது புலால் உண்டு, முதலில் பிரச்சினையை ஏற்படுத்தியவரை முதலில் இந்த அரசு கண்டித்திருந்தால், இவ்வளவு களேபரம் வந்திருக்காது. சிறுபான்மையினரின் வோட்டுக்கு பயந்து, கண்டுகொள்ளாமல் விட்டது தான் அடிப்படை தவறு. இதற்கு யாருக்கு என்ன தண்டனை ?


vbs manian
டிச 12, 2025 08:45

திருப்பரங்குன்றம் விஷயத்தில் அடாவடி அரசியல் செய்யும் கழகத்தோடு கை கோர்த்துள்ள காங்கிரசுக்கு வடமாநில தேர்தல்களில் இன்னும் பலத்த அடி விழும்.


Thiagaraja boopathi.s
டிச 12, 2025 07:27

50 பேர் அதிகம் ஐயா ஐந்தாக குறைக்க வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை