உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்தாவது தோல்வியால் பழனிசாமிக்கு நெருக்கடி

பத்தாவது தோல்வியால் பழனிசாமிக்கு நெருக்கடி

பத்தாவது தோல்வியால் பழனிசாமிக்கு நெருக்கடி

முன்னாள் முதல்வர் பழனிசாமி அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அக்கட்சி நிலை என்னாகும் என்ற கேள்வியும் அவர்கள் இடையே எழுந்துள்ளது.தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பின், 2017 பிப்ரவரியில், இடைப்பாடி தொகுதி, எம்.எல்.ஏ.,வான, பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உடன் இணைந்து, 2017 ஆகஸ்டில் கட்சியின் இணை பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றார்.இவர்கள் தலைமையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், 40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், 2ம் இடத்தையே பிடித்தார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.தொடர்ந்து காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகள், லோக்சபா தொகுதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடந்தது. அதில், பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில், தி.மு.க., 13, அ.தி.மு.க., 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை, ஸ்டாலினிடம் பறிகொடுத்தனர். தொடர்ந்து நடந்த, ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது.இதையடுத்து, 2022ல் இடைக்கால பொதுச்செயலர், தொடர்ந்து பொதுச்செயலராக, பழனிசாமி உருவெடுத்தார். இவரது தலைமையில், அ.தி.மு.க., ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும், கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு, 'பல கட்சிகள் கூட்டணிக்குள் வரும்' என்ற எண்ணத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணியை, பழனிசாமி முறித்துக்கொண்டார். ஆனாலும், தே.மு.தி.க.,வை தவிர வேறு கட்சிகள் கூட்டணியில் சேரவில்லை. தற்போது தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், அ.தி.மு.க., கூட்டணி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளது. பல தொகுதிகளில், 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்து வரும் தொடர் தோல்விகளால் தொண்டர்கள், நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

போஸ்டர்

லோக்சபா தேர்தல் முடிவு, அ.தி.மு.க.,வினரை விரக்தி அடைய செய்துள்ள நிலையில், சேலத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'சிந்திப்போம் செயல்படுவோம் சின்னம்மா தலைமை ஏற்போம்' என கூறி, 'செங்கோட்டுவேலவன் சேலம் மாநகர் மாவட்டம்' என குறிப்பிட்டு, அ.தி.மு.க., கொடி வண்ணத்தில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

konanki
ஜூன் 05, 2024 23:12

10 தோல்வி பழனிச்சாமி


konanki
ஜூன் 05, 2024 23:11

தலைவர் எம் ஜி ஆர் இரும்பு பெண்மணி ஜெயலலிதா உயிரை குடுத்து வளர்த்த கட்சியை அறவே ஒழித்து கட்டும் விதமான அரை வேக்காடு அரசியல் முடிவுகள் எடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி யிடமிருந்து கட்சி யை காப்பாற்ற தொண்டர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. இப்ப இல்லை என்றால் கட்சி கதி அதோ கதி தான்


sankaranarayanan
ஜூன் 05, 2024 22:47

என்ன செய்வது இனி கட்சிக்கு பத்து செய்வதுதான் உத்தமம்


Ayyavu Uthirasamy
ஜூன் 05, 2024 21:53

ஒரு மயி...ம் நடக்காது. அதிமுக தற்போது தோற்றிருக்கலாம், காரணம் இந்த தேர்தலில் அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுக விடம் பதில் இல்லை. அத்துடன் சரியான கூட்டணி அமையவில்லை. இதற்கெல்லாம் எடப்பாடியார் காரணம் இல்லை. சீட்டு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் வாக்கு சதவிகிதம் குறையவில்லை. அத்துடன் அதிமுகவை வழி நடத்த எடப்பாடியார் தவிர வேறு யாரும் அதிமுகவில் கிடையாது. ஆகவே அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளும், துரோகிகளும், பாஜக சங்கிகளும், அதன் ஜால்ரா தினமலரும் எதிர்பார்ப்பது போல் அதிமுகவில் எந்த பிரச்சனையும் வராது.


durairajdheenadayalan
ஜூன் 05, 2024 17:12

புரட்சி தலைவர்,புரட்சி தலைவர்,புரட்சி,தலைவிஅகியோர்களால் கட்டி காத்த கோட்டையை இவர்கள் துவம்சம் செய்கிறர்கள் இனி உண்மையான தொண்டர் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம், நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்,இனியாவது திருந்துங்கள், இல்லய்யென்றால் நாங்கள் ஒன்று .சேர்ந்து கட்சியை காப்பாற்ற போராடுவோம் .


Mubarak ali Mohammed
ஜூன் 05, 2024 16:32

ஓ. பன்னீர்செல்வத்துக்கு


J.V. Iyer
ஜூன் 05, 2024 16:06

கட்சியின் நலனைக்கருத்தாமல் ஈகோவினால் வந்த பிரச்சினை. பாஜகவுடன் கைகோர்த்திருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம்.


Ayyavu Uthirasamy
ஜூன் 05, 2024 21:55

தற்போது கிடைத்திருக்கும் ஓட்டும் கிடைத்திருக்காது.


Sampath Kumar
ஜூன் 05, 2024 08:54

பழனிசாமிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இவரின் பிடிவாதத்தால் பனீரை ஒதிக்கிணறு அதன் பலன் இந்த தேர்தலில் மரண அடி வாங்கி உள்ளார் வோட் சதவிகிதம் பிஜேபியைவிட அதிகம் இருந்தும் ஒரு செஅட் கோடா வெல்ல முடிய வில்லை என்றால் என்ன அர்த்தம் ?முடித்து கட்சியை களைத்து விட்டு ஒய்வு ஏடுக்கலாம் அது செய்யமாட்டாரு மீண்டு பிஜேபி ஒட்டணி என்று அலைவரு பிஜேபியை வளர்த்து விட்டு இவரு காணாமல் போவாரு இது தான் நடக்கும்


Ayyavu Uthirasamy
ஜூன் 05, 2024 21:56

முதல்ல நல்லா தமிழில் எழுதி பழகு.


Guna Gkrv
ஜூன் 05, 2024 06:58

பழனிசாமி புற வாசல் வழியாக வந்த நபர் எப்படி அதிமுக வில் செல்வாக்கு பெறமுடியும் ஜெ அம்மாவின் பெயரால் பொழப்பு ஓடியது இப்ப எப்படி முடியும்? இவர்கள் சண்டைக்கு பஞ்சாயத்து வைக்கவே ஒரு ஆள் தேவை படும் பொது எப்படி இவர்களால் கட்சி நடத்த முடியும் ?தேவை இல்லாமல் கட்சியில் குழப்பத்தை உண்டு பண்ணி பழனிச்சாமி பன்னீர் செலவத்தை வெளியே அனுப்பி விட்டார் அதனாலும் ஓட்டுகள் பிரிய வாய்ப்பு இருந்தது நடந்துவிட்டது ஒழுங்காக பன்னீர்ச்செலவத்தை ஒன்று சேர்த்து கட்சியை வளர்க்க வேண்டும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை