உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால் பழனிசாமி... அப்செட்! : தேர்தல் நாளில் பூத் ஏஜன்ட்கள் ஆப்சென்ட்டால் கடுப்பு

அ.தி.மு.க., பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால் பழனிசாமி... அப்செட்! : தேர்தல் நாளில் பூத் ஏஜன்ட்கள் ஆப்சென்ட்டால் கடுப்பு

தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் குறித்து, தமிழகம் முழுதும் இருந்து வரும் தகவல்களால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அப்செட்'டாகி உள்ளார். தேர்தல் களத்தில் கட்சியினர், வேட்பாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை; ஓட்டு சேகரிக்கவில்லை. ஓட்டுப்பதிவு நாளன்று, பூத் ஏஜன்ட்களாக நியமிக்கப்பட்ட பலர், பூத்தில் இல்லை என சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த விபரம் உண்மையானதா என்ற விசாரணையில் பழனிசாமி இறங்கியுள்ளார். அதனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின், கட்சி கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களை பழனிசாமி மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mtw621cs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையவில்லை என்றதும், அக்கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்டநிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.பழனிசாமி வலியுறுத்தி கேட்டுக் கொண்டும், பலர் ஒதுங்கிக் கொண்டனர். அதனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட பெருந்தனக்காரர்களை தேர்வு செய்வது என முடிவெடுத்த பழனிசாமி, கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் குறைந்தபட்சம், 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யக் கூடியவர்களை வேட்பாளராக்கினார்.

வாய்ப்பு

கட்சியில் சேர்ந்து சில நாட்களே ஆனாலும், அவர்களுக்கும் போட்டி யிட வாய்ப்பு அளித்தார். ஆனாலும், முன்னாள் அமைச்சர்களும், மா.செ.,க்களும், நிர்வாகிகளும் பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக களத்தில் வேலை செய்யாமல் ஒதுங்கி இருந்துள்ளனர்; வேலை செய்வது போல போக்கு காட்டியுள்ளனர். அவர்களை தேர்தல் பணியாற்றும்படி கூறி, பழனிசாமி விரட்டி உள்ளார்.ஒரு கட்டத்தில், அவரே பிரசாரத்தில் களமிறங்கி, தமிழகம் முழுதும் ஒற்றை ஆளாக சுற்றி வந்தார். இந்த விஷயத்தில், அவரது பிரசாரம் கைகொடுத்தது; ஆனாலும், களப்பணி சொதப்பியது. இதையறிந்ததும், கடைசி நேரத்தில் ஒவ்வொரு மா.செ.,விடமும் போன் போட்டு பேசியதுடன், வாக்காளர்களுக்கு, 'பரிசு'கள் கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர்களும் தங்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசுப் பொருட்களை, மா.செ.,க்களிடம் ஒப்படைத்தனர். அனைத்து தொகுதிகளுக்கும் பரிசுப் பொருட்கள் போய் சேர்ந்தன. ஆனாலும், பல இடங்களில் அவை முறையாக வாக்காளர்களிடம் சேர்க்கப்படவில்லை.பழனிசாமி கேட்ட போதெல்லாம், 'எல்லாம் பிரமாதமா ஏற்பாடு செஞ்சாச்சு தலைவரே. நமக்குத்தான் வெற்றி' என, மா.செ.,க்கள் பலரும் கூசாமல் பொய் கூறி உள்ளனர். இதனால், தேர்தல் நாளில் பிரச்னையின்றி மா.செ.,க்கள், பூத் ஏஜன்ட்கள் வாயிலாக தேர்தலை எதிர்கொள்ளலாம் என பழனிசாமி நினைத்தார். ஆனால், பூத் ஏஜன்ட்களாக நியமிக்கப் பட்டவர்களில் பலரும் காலை 11:00 மணிக்கே பூத்களில் இருந்து காணாமல் போயுள்ளனர்.மாலை 4:30 மணிக்கு மேல்தான் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். இடையில் என்ன நடந்து இருந்தாலும், அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த விபரம் பெரும்பாலான மா.செ.,க்களுக்கு நன்கு தெரிந்திருந்தும், கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அதனால், பூத் ஏஜன்ட்கள் அனைவரும், தி.மு.க.,விடம் விலைபோய் விட்டனர் என்ற தகவல் பழனிசாமிக்கு வந்துள்ளது.வடசென்னை மா.செ., வும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார், தன் மகன் போட்டியிட்ட தென்சென்னை தொகுதியில், பல்வேறு பூத்களில் ஏஜன்ட்கள் காணாமல் போனதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். சோழிங்கநல்லுார், தி.நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய தென்சென்னை லோக்சபா தொகுதிக்குள் அசோக், கந்தன், சத்யா, ரவி உள்ளிட்ட நான்கு மா.செ.,க்கள் உள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் ஜெயகுமார் புகார் கூறியுள்ளார். தன் மகன் தோல்வி அடைந்தால், அதற்கு இந்த நான்கு பேருமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோலவே, தமிழகம் முழுதும் பல தொகுதிகளில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன.அதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் பழனிசாமி, புகார்களுக்கு ஆளானவர்களிடம் தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானபின், கடுமையான முடிவு எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு

தேர்தல் முடிவுகளுக்குப் பின், அ.தி.மு.க., கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பா.ஜ., விஷயத்தில் தனக்கு ஆலோசனை சொல்வது போல கூறி, கூட்டணியை விட்டு விலகும் முடிவு எடுக்க வைத்தவர்களை, முழுமையாக விலக்கி வைக்க பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். தற்போது சேலம் வீட்டில் தங்கியுள்ள பழனிசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

விமானங்கள்
ஏப் 29, 2024 21:12

முதுகில் குத்தியே முதலமைச்சர் ஆனவர் பணத்தை காப்பாற்றிக் லஞ்ச ஊழல் வழக்கில் தப்பிக்க திமுகவின் கூட்டு வைத்து துரோக அரசியல் நடத்திய தன்னை காப்பாற்றிக் கொள்ளும் இவரால் கட்சி அழியும்


Jagan (Proud Sangi)
ஏப் 29, 2024 20:05

தினமலர் தமிழ் எடிட்டரில் டைப் செய்தல் நம்பர் விடுபட்டு போகுது முன்ன எழுதிய கமெண்ட் களில் நம்பர் எல்லம் மிஸ்ஸிங்


Jagan (Proud Sangi)
ஏப் 29, 2024 18:32

நிறைய soft Hindutuva ஹிந்து மிதவாதிகள் ஆட்கள் வேறு வழி இன்றி ADMK விற்குஜெயாவிற்காக வோட்டு போட்டார்கள் இப்ப அவர்களுக்கு என்ற ஒரு கட்சி வேர் பிடிக்க தொடங்கி விட்டதால் பிஜேபி பக்கம் சென்று விட்டார்கள் admk வாக்குகள் குறைந்தால் அது நிச்சம் தீயசக்தி கட்சிக்கு போகாது, வேற வழி இல்லாமல் பிஜேபி பக்கம்தான் போகும் வெல்ல மண்டிக்காரர் accidental leader தான், அரசியல் தொலைநோக்கு மற்றும் கள நிலவரம் தெரியாதவர் என்று நிரூபித்தது விட்டார் ல் ஜெயிக்க வேண்டுமானால் பிஜேபிக்கு இடம் குடுக்க வேண்டி வரும் கூட இருந்திருதாலாவது இல்ல சட்டசபை தொகுதிக்குள் முடக்கி இருக்கலாம் அரசியல் அறிவு பத்தல


Jagan (Proud Sangi)
ஏப் 29, 2024 18:20

EPS சில மூத்த பத்திரிகையாளர்கள் என்று சமூக வலைத்தளத்தில் திரியும் சில அரசியல் கத்துக்குட்டிகள் பேச்சை கேட்டு ஏமாந்து விட்டார் VCK மற்றும் உண்டியலில் கட்சி வரும் என்று தட்டெத்தி விட்டு பிஜேபி யை அத்து விட்டார், இப்போ பிஜேபி இல்ல % வாக்குகளை பெற்றால் ல் பிஜேபி காலில் விழும் நிலை தான் வரும் அப்போ பிஜேபி முதல் இடம் கேட்கலாம் தரவில்லை என்றால் தனித்து போட்டி என்று மீண்டும் எடப்பாடியை தோல்வி அடைய செய்யலாம் இப்ப சேர்ந்து இருந்திருதாலாவது பிஜேபி வாங்கினது எங்க வோட்டு என்று உருட்டலாம் இப்ப அதுவும் போச்சு வெல்ல மண்டிகாரர் மாவட்ட அளவு தான் என்று வெளிச்சம் போட்டு கட்டிவிட்டது குள் ED /IT வச்சு பெல் பாய்ஸ் தங்கமணி வேலுமணி, விஜய பாஸ்கர் , ராஜேந்திர பாலாஜி என்று ஹிட்மென் வேலை செஞ்சு இறக்கிடலாம் கண்டவன் பேச்சை கேட்டு வெல்ல மண்டிக்காரர் தோத்து விட்டார் வெள்ளாள கவுண்டர்கள் இளசிங்கம் பக்கம் போவாவர்களா இல்லை வயதான அரசியல் புரிதல் இல்லவதவர்கள் பேச்சை கேட்க்கும் தோல்வி சாமியிடம் போவார்களா ?


Narayanan
ஏப் 29, 2024 17:06

பழனிச்சாமி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் வெறும் செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பதவியை தக்க வைத்துக்கொள்ளமுடியாது மேலும் அடுத்தவன் பதவியை ஆட்டை போட்டும் வாழமுடியாது அரவணைப்பும் அனுசரணையும் வேண்டும் வெற்றிபெற ஓபிஎஸ் இடம் பதவியை கேட்டு வாங்கி இருக்கலாம் திருடியது நல்லது அல்ல நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று சமாதியில் சத்தியம் செய்துவிட்டு இன்று நான்தான் பொதுச்செயலாளர் என்று தம்பட்டம் அடித்தால் பின்னர் சத்தியத்திற்கு என்ன மதிப்பு ?


sethu
ஏப் 29, 2024 15:49

திடீர் என பலகோடிகள் பணம் லாட்டரி அடித்தால் நம் ணம் என்னசெய்வது என தெரியாமல் அதுவரை நமக்கு கடன் கொடுத்து உதவியானைக்கூட ஒரு ரேஞ்சில் நம்பார்வை மாறிப்பார்க்கும் கூடவே செயலும் மாறும் அதுபோல காலில் விழுந்து பதவி அதாவது கொடுக்கும் கையை முறித்தாள் பின் எந்த கையில் இருந்து நாம் பலன் பெறமுடியும், என்ற அடிப்படை கூட தெரியாமல் தான்தான் தன்னால் தான் அதிமுக என காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் மயிலாக பாவித்து தன அழகில்லாத தொகையை விரித்து ஆடியது போல போய்க்கொண்டு இருக்கிறார்


Krishnaswame Krishnaswame
ஏப் 29, 2024 13:33

ஜூன் 4 ல் அதற்கு முற்று புள்ளி வைக்கும். அதிமுக அமோக வெற்றிபெறும் என்று சொல்லவில்லை அதே சமயம் ஆர்வக்கோளாறை மக்கள் தீர்ப்பு பொடிபொடியாக்கும். தீயமுக 38% பெறும், அஇஅதிமுக 32% பெறும் நாதக 11%பெறும் பாஜக 19% நினைப்பது போல் அதிமுக வை ஒன்றும் செய்ய முடியாது


Jagan (Proud Sangi)
ஏப் 29, 2024 18:22

ஒரு சின்ன change , ADMK க்கும் குறைவான வாக்கு சதவிகிதம் தான் பெரும்


R.PERUMALRAJA
ஏப் 29, 2024 12:35

ஆ தி மு க வை மிதித்து கூழ் கூழாக்கி அதன் மீது ஏறி சவாரி செய்ய போகிறது பா ஜா கா என்று சாமானியனுக்கு கூட தெரிந்தது எடப்பாடிக்கு தெரியவில்லை, ஏன் தொண்டர்களுக்கு கூட தெரிந்துவிட்டது, அதனால் தான் தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் சுணங்கிவிட்டனர் அஞ்சிக்கும் பத்துக்கும் அலைந்து துண்டு பீடி அடித்து கட்சி ஆரம்பித்தவன் எல்லாம் வரும் நாட்களில் தலைவனாகி, ஆ தி மு க வின் தொண்டர்களி தன் வசப்படுத்தி, தன் கட்சியை பெரிய அளவில் கொண்டு எல்லப்போகிறான் அன்று தெரியும் இன்றைய ஆ தி மு எ ....


R.PERUMALRAJA
ஏப் 29, 2024 12:25

இலவசமாக கட்சியை வளர்க்க " போதை மருந்து " என்னும் விவகாரம் கிடைத்து இருக்கிறது, மாணவர்களிடையே இதை கொண்டு சேர்த்தால் கட்சி வளரும் என்று ப ஜா கா, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு தெரிந்தது கூட எடப்பாடியிற்கு தெரியவில்லை, கட்சியை தலைமையும் வளர்க்கவேண்டும், நிர்வாகிகளும் வளர்க்க வேண்டும், தொண்டர்களும் வளர்க்க வேண்டும் ஆ தி மு க வில் கட்சி தலைமை ஜெயா போல நினைத்திக் கொண்டிருக்கிறது, ஜெயா வேறு எடப்பாடி வேறு கட்சியை மீண்டும் வளர்த்து எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் மாணவர்களின் வாசலை தட்டுவது தான் சிறந்தது ,அதற்க்கு தீனி போடுவது போல போதை விவகாரம் கிடைத்து இருக்கிறது போதை விவகாரத்தை பா ஜா க முன்னெடுத்து செல்லப்போகிறதா அல்லது ஆ தி முக செல்ல போகிறதா என்று வரும் நாட்களே சாட்சி கட்சி நிர்வாகிகள் ஆர்வம் குறைந்து காணப்படுவதற்கு காரணம் கட்சியின் செல்வாக்கும் ஒரு காரணமே


R.PERUMALRAJA
ஏப் 29, 2024 12:11

போதை மருந்து விவகாரத்தை கொண்டு கல்லூரி, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் போராட்டம், துண்டு பிரசுரம் செய்து இளம் வாக்காளர்களிடம் கட்சியை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம், இதை எல்லாம் செய்ய தவறிவிட்டது இன்றைய எடப்பாடியின் ஆ தி மு க மாவட்ட செயலார்களிடம் மட்டும் எரிந்து விழுந்து ன்ன பயன்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை