உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பால திறப்பு விழா: முதல்வர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பால திறப்பு விழா: முதல்வர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பால திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருந்தால், தமிழகத்துக்கு நன்மை கிடைத்திருக்கும்; கேலி, கிண்டல் செய்யப்படுவதையும் முதல்வர் தவிர்த்து இருக்க முடியும்.ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழக அரசையும், ஆளும் தி.மு.க.,வினரையும் கேலி, கிண்டல் செய்யும் வகையில் பேசினார்.தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து இடுவதாக அவர் கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க., அரசியல் செய்து வரும் நிலையில் அதற்கு பதில் அளிப்பது போல், பாடத்திட்டங்களை தி.மு.க., அரசு தமிழில் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார்.ஒருவேளை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருந்தால், மேடை நாகரிகம் கருதி பிரதமர் மோடி இப்படி தி.மு.க.,வினரை கேலியும், கிண்டலுமாக பேசியிருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசிடம் வைத்திருக்கும் பல கோரிக்கைகளை பரிசீலிக்கவே இல்லை என தொடர்ந்து கூறிவரும் முதல்வர், பாம்பன் விழாவில் பங்கேற்று இருந்தால், மக்கள் முன்னிலையில் நேரடியாக மேடையில் பிரதமரிடம் கோரிக்கைகளை வைத்திருக்க முடியும். தமிழகத்துக்கு நன்மைகளைப் பெற்று இருக்க முடியும்.இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின், தனது மூத்த சகோதரர் என்று கூறிக் கொள்ளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாணியை பின்பற்றியிருக்கலாம். ஸ்டாலினை போலவே, மோடியை கடுமையாக எதிர்த்தாலும் கேரளாவில் பிரதமர் கலந்து கொள்ளும் எந்த அரசு நிகழ்ச்சியையும், பினராயி விஜயன் தவறவிடுவது இல்லை. விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்று, மேடையில் பிரதமரோடு பங்கேற்று கேரள அரசின் தேவைகளை பட்டியலிட்டு பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 87 )

sankaranarayanan
ஏப் 15, 2025 21:17

அரசியல் நாகரிகம் தெரியாதவர்களுக்கு என்னதான் சொன்னாலும் தெரியாது சுயமாகாமவும் புரியாது ரெண்டுகெட்டான்தான் .அடிபட்டால்தான் புரியும்


Sesh
ஏப் 15, 2025 17:46

ஸ்டாலின் முதல்வர் நிலையில் இருந்து யோசியுங்கள் . அந்த பாலத்தின் மீது மிக அதிக வேகத்தில் காற்று வீசும்


Nesan
ஏப் 15, 2025 12:41

ஒன்றும் மக்களுக்கு நடந்திருக்காது


Dhandapani
ஏப் 13, 2025 07:44

கேரளாக்காரன் காரியக்காரன், நம்ம தி. மு. க முதல்வர் வெறும் வாயிதான் மக்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வறட்டு கெளரவம் பிடித்தவர்


மூர்க்கன்
ஏப் 12, 2025 09:21

காரியம் சாதிக்கணும்னா கழுதை காலிலும் விழலாம் என்கிறார் நிருபர். மானமும் அறிவுமே மறத்தமிழனுக்கு அழகு என ஆட்சி செய்கிறார் நமது முதல்வர். வடஇந்தியா முழுவதும் ஒரே பேச்சு வேறெந்த மாநிலத்தையும் விட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் மிக அதிகம் இவ்வளவிற்கும் இங்கே பக்த்தால் சொல்வது போல மபி ,உபி , பீ ஹார் இப்போ ஏபி சவலை பிள்ளைகளுக்கு அள்ளிக்கொடுத்தும் எந்த வளர்ச்சியும் இல்ல ஆனா பச்சையா நிதி மறுக்கப்படும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறதே எப்படி?? என்பதுதான்.


என்றும் இந்தியன்
ஏப் 09, 2025 16:14

அதனால் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே??


V.Mohan
ஏப் 09, 2025 10:13

கூட்டாட்சி என்று சும்மா சொன்னால் போதுமா? அது எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற வரையறை இல்லையா? 3,4, குழந்தைகளை பெற்ற தாயே கூட தனது குழந்தைகளில் சவலைக் குழந்தைக்கே அதிக கவனம் தருவாள். இங்கே அதெல்லாம் எதுவும் தேவையில்லை. நாங்கள் அதிக வரி தருகிறோம் என்று பிதற்றுவது கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும் பேச்சு. இயற்கை பேரிடர் ஒரு மாநிலத்தில் மட்டுமா உள்ளது, எல்லா மாநில நிதி அமைச்சர்களும் பங்கு கொண்ட குழு செய்யும் முடிவுகளில் மாற்றம் எப்படி செய்ய முடியும்?. உலக வங்கியிடம் கடன் வாங்கினால் அது சொல்லும் நிபந்தனைகளை கேள்வி கேட்காமல் ஏற்பார்களாம். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் குறிக்கோள்களை சீந்த மாட்டோம் திட்டத்தின் நிதி மட்டும் தரவேண்டும் என கூறுவது இறுமாப்பு. தமிழக வாக்காளர்களின் முட்டாள்தனத்தால் 39 எம்.பி.சீட்கள் கிடைத்ததால் ஆணவப்பேச்சு மக்கள் நலம் முக்கியமல்ல இந்த விடியல் காரர்களுக்கு வாழ்க்கை ஒரு வட்டம், நீங்கள் மறுபடி 2011-2021 லெவலுக்கு போக மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? கருணாவின் விசுவாசிகள் அரசு ஊழியர்களாக 1967 முதல் உங்க ஊழல்களுக்கு உறுதுணையாக இருப்பதனால் தான் எவ்வளவு பெரிய முறைகேட்டிலும் ஆதாரம் இல்லாமல் மூடிவிடுகிறார்கள். மாறன் சகோதரர்கள் தங்கள் வீட்டு கார் ஷெட்டில் சன்டிவிக்காக முறைகேடாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து இருந்ததிற்கு 100 கோடி தருவதாக வாக்குமூலம் அளித்த கேஸ் எப்படியோ மறைத்து ஊத்தி மூடியாயிற்று. இவ்வளவு பெரிய ஊழல்வாதிகள் ஆட்சியில் - போதை தாராளம், பாலியல் குற்றங்கள் ஏராளம், நித்தம் கொலைகள் சரளம், ஏளனப் பேச்சுக்கள் ஏராளம். சிறப்பான ஆட்சி என தாங்களே சொல்லிக் கொள்ளும் கேவலம்


Ray
ஏப் 09, 2025 02:17

நத்திப் இழைக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர். நல்லது கேரளா முதல்வரை உதாரணமாக சொல்லியுள்ளார். கேரளத்துக்கு பனமழை கொட்டுகிறதோ? வயநாடு இயற்கை பேரழிவிற்கு கிடைத்தது என்ன? ஒன்றும் கிடைக்காததற்கு காரணம் என்ன? அங்கு பேரழிவு ஏதுமில்லையா? இல்லை அந்த தொகுதி MP ப்ரியங்கா என்பதுதான் காரணமா என்று விளக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கோளாறு ஒன்றே காரணம் எனலாம்.


சிவா
ஏப் 08, 2025 21:01

ஆந்திராவும் , பீகாரரும் கொடுத்து வைத்த மாநிலங்கள்.


மூர்க்கன்
ஏப் 14, 2025 16:44

எடுப்பது பிச்சை ?? இதில் என்ன பெருமை, அதிர்ஷ்டம் எல்லாம் உழைப்பே உயர்வு அதற்கு முதல்வரே முன்மாதிரி தமிழகமே மற்ற மாநில அடிமைகளுக்கு தலைமை ஏற்க தகுதியுள்ள முன்மாதிரி மாநிலம். இது எல்லாம் மத்திய அரசின் புள்ளிவிபர கணக்கு, அண்ணாமலை போல தண்ணீரில் எழுதியது அல்ல கல்லில் செதுக்கியது


Sivasankaran Kannan
ஏப் 08, 2025 16:43

200 உபி, என்ன சொந்த பணத்தை எடுத்து மக்களுக்கு சேவையை செய்றங்க.. மக்கள் பணத்தை திருடி கொழிக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை