வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பெற்றோர்கள்தான் கண்காணிக்கணுமாமே .. அந்த பெற்றோர்களுக்குத்தானே ஊற்றி கொடுத்து பணத்தையெல்லாம் பிடுங்கி கொண்டீர்கள். அப்புறம் எப்படி அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பது கண்டிப்பது? ஆட்சியா இது அலங்கோலத்தில் அசிங்கப்பட்டு நிற்கின்றது. மக்களிடையே இதுவரையில் இல்லாத அளவுக்கு திமுக எதிர்ப்பு அலையானது எங்கு பார்த்தாலும் காண முடிகின்றது. இந்த வாய்ப்பினை எதிர்கட்சிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் திமுகவுக்கு எதிரான பெருமான்மையான வாக்குகள் எல்லாம் சிதறிப்போய் மீண்டும் தீயசக்திக்கே வாய்ப்பாக அமைந்துவிடும். ஈகோவை விட்டுவிட்டு ஒன்றுபட்டு திமுகவை எதிர்த்தால் போதும் ஒட்டுமொத்த திமுகவின் கூட்டணி தீயசக்திகளை விரட்டிவிடலாம் பணத்தால் விலைக்கு வாங்கிடலாம் அப்பாவி ஜனங்களை என்கிற மமதையில் உள்ள திமுகவை விரட்ட ஒன்றுபட்டு செயல்பட சிந்திக்க வேண்டும்.
பெற்றோர்தான் கண்காணிக்க வேண்டுமாம். பொறுப்புள்ள முதல்வர் பேசுகின்ற பேச்சா இது? இதே வைகோ கழகத்துடன் இல்லை என்றால் இந்நேரம் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டிருப்பார் வார்த்தைகளால். வாட்ச்மேன் வேளைக்கு கூட லாயக்கில்லாதவர் இந்த ஸ்டாலின் என்று தயக்கமே இல்லாமல் விமர்சித்தவருக்கு ஸ்டாலினின் இந்த பேச்சால் கொதித்திருப்பார். என்ன செய்ய பிள்ளை பாசத்தில் தான் ஒரு கிறிஸ்துவர் என்பதால் இந்துக்களின் நம்பிக்கையை பற்றி பேசி மத மோதலை தூண்டுகின்றார்களே. ஓட்டுக்காக மத மோதலை தூண்டுகின்ற இவர்களையெல்லாம் மத தலைவர்கள் அடையாளம் கன்டுகொண்டார்கள் இனி இந்த வாயால் சுடுகின்ற வடை விற்க முடியாது என்பதை ஸ்டாலின் விரைவில் புரிந்து கொள்வார்.
திமுக ஆட்சிக்கு வரணும்ன்னு நினைத்தாலே மாநிலத்தில் சாதி மோதலை தூண்டுவார்கள். ஆட்சில் இல்லை என்றால் ஆங்காங்கே சாதி மோதலை தூண்டுவது என்பது கடந்தகால கழகத்தின் வரலாறு. இப்போ இதுவரை எங்கும் சாதி மோதலே இல்லை. திமுக தோற்பது உறுதி என்று தெரிந்தால் போதும் இப்போது சில சாதிகளை தூண்டிவிடுவார்கள்.. இருக்கவே இருக்கின்றார் சாதித்தலைவர் திருமா. இன்னோர் இரண்டு சீட்டு கொடுக்கின்றோம் என்றால் அவர் தயார்தான் சாதிமோதல் தூண்ட. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை பொறுக்க மாட்டாமல் மத மோதலை தூண்டிவிடுகின்றார் ஸ்டாலின் . அதற்கு ஜவகர் போன்ற ஒருவருட சிறை தண்டனை பெற்ற நிலையில் கைது செய்யாமல் இருக்க அவரைப்போன்ற சிலரை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றார் போலும் இன்னும் சில தினங்களில் ஸ்டாலின் சொல்வதை இந்த விஷயத்தில் நிறைவேற்ற போகிறார் என்று எதிர்பார்க்கலாம். ஐந்தாண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டார். அந்த ஓசி சுகத்துக்காக இப்படியெல்லாம் பேசி பயமுறுத்துகின்றார் அப்பாவி ஜனங்களை. உஷார் மக்களே.
இந்த யூடுயூப் பார்க்கின்ற பழக்கத்தை கைவிட வேண்டும் போங்க..அதுவும் ஒரு போதைதான். இந்த வைகோவின் ஸ்டாலின் பற்றிய பேச்சுக்களை கேட்கும்போது மனிதருக்கு கடந்த கால பேச்செல்லாம் மறந்துபோயி வாரிசு மேலே வந்த கொள்ளைப்பாசத்தில் மீண்டும் நடைப்பயணமாம்.. நகைச்சுவைகள் கும்பல்கள் இந்த வாரிசு அரசியலில் போதைக்கு அடிமையானவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் போதை போல. வைகோவுக்கு வாரி அரசியலும், சேர்ந்துவைத்துள்ள ஏகப்பட்ட சொத்துக்களும் கட்சியின் பெயரில் தனது கையைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு மல்லை சத்யா போன்ற தியாகிகளையெல்லாம் துரத்திவிட்டு வாரிசு அரசியல் போதையில் அம்னீசியா தாக்கத்தில் நடக்கப்போகிறார் அதற்கு சாராய ஆட்சியாளர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்களாமே. சிரிக்க சிரிக்க எழுதுகின்றேன் இவர்களை நினைத்து நினைத்து ..ஆஸ்கார் அவார்டுகளை ஒட்டுமொத்தமாக இவர்களுக்கே கொடுக்கவேண்டும்
முதல்வருக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றால், போலிஸ் துறை எதற்கு?
கஞ்சாவை அரசு ஆஸ்பத்திரியிலே வளர்வதை காணொளியில் பார்த்துட்டோம்.. இதுதான் இன்றைய தமிழகம். வகை வகையான சாராயங்களும் அதனை தயாரிப்ப்பதும் இந்த கழகம்தானே அதிகம் பேர் உள்ளனர். ஏன் பொறுப்புள்ள அப்பா அதனை மூட வேண்டியதுதானே? ஏன் பணம் பாதாளம் வரை பாய்ந்துகொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக சம்பாதிக்க முடியாத நிலையில் கிடைத்த இந்த ஆட்சியை வைத்து சாராயத்திலும் போதையிலும் தான் அதிகம் சம்பாதிக்கின்றார்கள் கழக உ பிக்கள். அதனை கொண்டுதான் ஆங்காங்கே உள்ள தொகுதிகளில் பணத்தை கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் கஞ்சா கடத்தப்படுகின்றது, மேலும் மலைப்பகுதிகளில் வளர்க்கப்படுகின்றது. இதனை தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? மத்திய அரசாங்கமோ? இவர்கள் சம்பாதிப்பார்களாம் போதை மருந்துகளை விற்று. ஆனால் தடுக்க சொல்வது மத்தியில் இருப்பவர்களையும். நல்ல நியாயம் போங்க சர்வாதிகாரி அவர்களே. என்ன செய்வது நம்ம ஊரு போலீசுக்கு சமூக ஊடக நபர்களை தேடி தேடி கைது செய்வத்தார்க்கே நேரமில்லை என்கிறபோது ஸ்டாலின் கேட்பதும் நியாயம் தான் என்று 200 ரூபாய்க்கு மாரடிக்கும் உ பிக்கள் சொல்வார்கள்
சாராயக்கடையை நடத்தியும் கூட கள்ளச்சாராயம் எப்படி தயாரிக்க முடிந்தது? அதனை குடித்த அப்பாவி கூலி தொழிலாளர்களில் 69 பேரின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணமா? அதற்கு காரணமானவர்கள் ஆளும் திமுக கரைவேஷ்டிகள் தான் என்பதும் தெரிந்தும் கூட வெறும் சிறை தண்டனையோடு நிறுத்திய பெருமை இந்த திராவிட மாடல் அரசுக்குத்தானே சேரும். சர்வாதிகாரியாக இருப்பேன் என்றவர் அங்கே சென்று துக்கம் விசாரிக்க கூட செல்லவில்லையே ஏன்? இதுதான் ஒரு அப்பாவின் பொறுப்புணர்வு ?
சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினின் தங்கச்சி என்ன சொன்னார்கள்? இந்தியாவிலேயே இளம் வயது விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடித்த அவரும் கூட என்ன சொன்னார்? கழகம் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே டாஸ்மாக் மூடுவதுதான் என்கிறார். மக்களும் அப்படியே புல்லரித்துப்போய் வாக்குகளை எல்லாம் கழகத்துக்கே வாரி வழங்கினார்கள். ஆனால் விதி பாருங்கள் எப்படி விளையாடிவிட்டது என்று. டாஸ்மாக்கில் கொழிக்கும் கோடானு கோடி பணத்தில் போதையால் மயங்கிப்போய் அந்த கனி அக்காவே சொந்தமாக சாராய ஆலையையே மக்களுக்காக திறந்து சமூக சேவை செய்கின்றார் என்றால் அண்ணனும் தங்கச்சியும் தமிழக மக்களை எந்த அளவுக்கு எடைபோட்டு வாயால் வடை சுட்டுக்கொண்டே இருக்கின்றார் பாருங்கள். இப்போ சொல்லுங்கள் யார் மீது தவறு என்று? வருடந்தோறும் 45 ஆயிரம் கோடி வருமானம் கொழிக்கின்றது என்றால் அதுகூட ஆட்சியாளர்களுக்கு போதையை கொடுக்கும்தானே? அந்த போதையை யார் தடுபப்து? வைகோ அவர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளும் திருமாவுமா?
சாதிகபாட்சா என்கிற போதை கடத்தல் நபரை கட்சியில் சேர்த்துக்கொண்டு அவருக்கு இளைஞர் அணியில் பதவியையும் கொடுத்து அழகுபார்த்த ஸ்டாலின் அவரிடமிருந்து பிறந்தநாள் அன்று காசோலையை வாங்கி அதில் உள்ள தொகையை பார்த்ததை உலகே பார்த்ததே மறந்து போயிற்றோ? மத்திய போதை தடுப்பு பிரிவு கைது செய்தபோது அவரை ஜாமீனில் எடுத்தது கழக வக்கீல் அணிதானே? அப்பா என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஸ்டாலினுக்கு அந்த போதை ஆசாமியை ஏன் திருத்த முற்படவே இல்லை. கேட்டால் பதில் இருக்காது மாறாக போலீசில் புகார் கொடுக்காமேல் கைது செய்ய துடிப்பார். டாஸ்மாக்கில் இப்போதெல்லாம் போதை இல்லை என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். அதை எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் கள்ள சாராயம் என்று சொல்வார்கள் ஆனால் அதில் சத்து டானிக் தருகின்றோம் என்று சொல்வாரா?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் போதை போல. அப்பான்னு தன்னை எல்லோரும் அழைப்பதை கேட்கும்போது உள்ளபடியே மனசு சந்தோசப்படுகின்றது என்று அவரே அவரை அழைத்துக்கொள்வது கூட ஒருவகை விளம்பர போதைதான் போலும். ஆனால் அந்த அப்பாவுக்கு பிள்ளைகளை திருத்த மட்டும் மனசு வரவில்லையோ? சென்ற தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்? கழகம் ஆட்சியில் வந்ததும் முதல் கையெழுத்தே டாஸ்மாக் மூடுவதுதான் என்கிறாரே.. அதன்பிறகு அதில் வருகின்ற கோடானு கோடி வருமானத்தில் மயங்கிப்போய் அந்த போதையில் தடுமாற்றம் கண்டு கையெழுத்தை போட இதுநாள்வரை மறந்துகொண்டே இருக்கின்றார்.