உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வர் பிரச்னையால் நோயாளிகள் அவதி

சர்வர் பிரச்னையால் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வெளி நோயாளிகள் சீட்டான, 'ஓபி' சீட்டு அவசியம். ஓபி சீட்டு பதிவெண் அடிப்படையில், நோயாளியின் நோய் குறித்த முழு விவரமும் சர்வரில் இருக்கும். நேற்றும், நேற்று முன்தினமும் அரசு மருத்துவமனைகளில் உள்ள இணைய தளத்தில், சர்வர் பிரச்னை ஏற்பட்டது. சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று காலை 8:00 மணியில் இருந்து 9:45 வரைக்கும், சர்வர் இயங்கவில்லை. 510 புற நோயாளிகள் நீண்ட நேரமாக காத்திருந்து, ஓபி சீட்டு பதிய முடியாமல் டாக்டரை பார்த்து சென்றனர்.மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, 'தமிழகம் முழுதும் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது' என்றனர். -- - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை