திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்: அன்புமணி
சென்னை: '' திமுக அரசு மீது அனைத்து தரப்பு மக்களும் கோபத்தில் உள்ளனர், '' என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 100 நாட்கள் வெற்றிகரமாக பாதயாத்திரையை நடத்தி முடித்தேன். பெரும்பாலான மாவட்டங்களுக்கும் சென்று, விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களை சந்தித்தேன். அனைவரும் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். எளிதாக தீர்க்கக்கூடிய பிரச்னைகள் உள்ளன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளன. இவ்வாறு அன்புமணி கூறினார்.